Posts

Dinamalar book review

Image
 தான் எழுதிய பல கதைகளில் இருந்து வெறும் ஏழு கதைகளை எடுத்து *லட்சத்தில் ஒருத்தி* என்ற பெயரில் சிறுகதை நூலாக்க முடிந்தார் எழுத்தாளர் *செம்மை உமா* அவர்கள்  *நூலேணி பதிப்பகம்* பதிப்பித்த இந்த நூல் இன்று *தினமலர்* இதழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. *எழுத்தாளரின் முதல் நூலை வாங்கி பாராட்டுவோம். அதன்மூலம் மகிழ்ச்சியைப் பரப்புவோம்.* நூல் விலை ₹130 + அஞ்சல் தொகை ₹20 *மொத்தம் ₹150/- செலுத்துங்கள். சிறந்த சிறுகதை நூல் இல்லம் தேடி வரும்*

Lollipop

Image
லாலிபாப் சிறுவர் உலகத்தை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 450 குழந்தைகளை ஒருங்கிணைத்து தினமும் அவர்களுக்கான ஏதாவது ஒரு செயலாக்கத்தை/பயிற்சியைக் கொடுத்து வருகிறார் #சிறுவர்_இலக்கியச்_செம்மல் #கன்னிக்கோவில்_இராஜா அவர்கள். ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், எதாவது கைவினைப் பொருட்கள் செய்தல் இப்படித் தொடர்ந்து குழந்தைகளோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் முதலில் பதிவு செய்து கொள்கிறேன். தான் மட்டும் உயராமல், தனக்கென மட்டும் என்று யோசிக்காமல் இளைய தலைமுறையினருக்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு,  அதையே தனது இலக்காக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களோடு லாலிபாப் சிறுவர் உலகத்தில் இணைந்து பயணிப்பது பெருமகிழ்ச்சி.  இன்றைய லாலிபாப் சிறுவர் உலகத்தின்  குழந்தைகளுக்கான ஒரு பயிற்சியாக கொடுக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சியை வரைக என்ற வகையில் #ஹரீஷ் என்ற குழந்தை கன்னிக்கோவில் இராஜா அவர்களையும், வண்ணத்துப்பூச்சியையும் இணைத்து அற்புதமாக ஓவியம் வரைந்து அ

Government School Storytelling

Image
  இனிதான அழைப்பு 🌾🌻🌾 இசை நுகரும் என் செவிகளுக்கு இனிதானதொரு அழைப்பு...  கவிஞர் இளம்பிறையின் அழைப்பு.  "ராஜா எங்க பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு 👦👧 கதை சொல்லுங்க" என்றார். நேரம் குறைவாக இருந்தபோதும்  மனம் நிறைவாய் இருந்ததை.. குழந்தைகளோடு இருந்தபோது உணர்ந்தேன். குழந்தைகள் "இன்னும் கொஞ்சநேரம் இருக்கச் சொன்னார்கள்"  மனதை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு உடல்கூடோடு அலுவலகம் வந்துவிட்டேன். வாய்பளித்த தோழிக்கும் மனம் மகிழ்வித்த குழந்தைகளுக்கும் பெருநன்றி. 🐦 நாள்: 16:10:2018

Mithravin kaaththadi

Image
 #நூல்அறிமுகம் நூல்: மித்ராவின் காத்தாடி நூலாசிரியர்: பிச்சிப்பூ (எ) சங்கீதா பிரபு வகை : சிறார் கதைகள் வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை 9841236965 விலை ரூ.100/- மட்டுமே இந்தத் தொகுப்பில் இருக்கும் 10 சிறுகதைகளும், குழந்தைகளை அள்ளியெடுத்து அக்கறையாய்க் கொஞ்சுகின்றன. அவர்களுக்குள் அன்பைச் சுரந்து அறிவை வருடுகின்றன. வாழ்வின் இயல்பை அவர்களுக்குப் புதுவிதமாய்ப் போதிக்கின்றன. அவர்களின் உலகை அவர்களுக்கு அடையாளம் காட்டுகின்றன. வாழ்வின் மீதான அவர்களின் பார்வையை நேர்த்தி ஆக்குகின்றன. வேறென்ன வேண்டும்? குழந்தைகளின் வாழ்வைச் சிக்கலில்லாமல் ஆக்க இவரது எழுத்துக்கள் மகத்தான மருத்துவம் செய்கின்றன. 📚🛒நூல் தேவைக்கு:  CALL📞/WHATSAPP : 9841236965

Tamil America TV

 தமிழ் அமெரிக்க தொலைக்காட்சியில் லாலிபாப் சிறுவர்களின் பாட்டும் கதையும் https://www.youtube.com/live/dlq8i57UrJU?si=By9WcC0vd7bjKPRH குழந்தைகளின் தனித்திறமையை ஊக்குவிப்பதற்காக கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட லாலிபாப் சிறுவர் உலகம் இன்றளவும் சிறப்பாக குழந்தைகளின் தனித்திறமையை ஊக்குவித்து வருகிறது. இதற்கு முதுகெலும்பாய் இருக்கிற கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களுக்கும்  பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கதை சொல்லி தேவதைகளுக்கும்  லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக பாராட்டுகள் இந்த காணொளி அண்மையில் தமிழ் அமெரிக்கா டிவியில் ஒளிபரப்பான பாட்டும் கதையும் நிகழ்வு இந்த நேரத்தில் தமிழ் அமெரிக்கா டிவி திரு ஆஸ்டின் அவர்களுக்கும் அவரிடம் குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி இதைக் கண்டு தங்களின் கருத்துகளை தாருங்கள்

Lollipop books 03

Image
 

Lollipop books 02

Image