லாலிபாப் சிறுவர் உலகத்தை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 450 குழந்தைகளை ஒருங்கிணைத்து தினமும் அவர்களுக்கான ஏதாவது ஒரு செயலாக்கத்தை/பயிற்சியைக் கொடுத்து வருகிறார் #சிறுவர்_இலக்கியச்_செம்மல் #கன்னிக்கோவில்_இராஜா அவர்கள். ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், எதாவது கைவினைப் பொருட்கள் செய்தல் இப்படித் தொடர்ந்து குழந்தைகளோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் முதலில் பதிவு செய்து கொள்கிறேன். தான் மட்டும் உயராமல், தனக்கென மட்டும் என்று யோசிக்காமல் இளைய தலைமுறையினருக்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, அதையே தனது இலக்காக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களோடு லாலிபாப் சிறுவர் உலகத்தில் இணைந்து பயணிப்பது பெருமகிழ்ச்சி. இன்றைய லாலிபாப் சிறுவர் உலகத்தின் குழந்தைகளுக்கான ஒரு பயிற்சியாக கொடுக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சியை வரைக என்ற வகையில் #ஹரீஷ் என்ற குழந்தை கன்னிக்கோவில் இராஜா அவர்களையும், வண்ணத்துப்பூச்சியையும் இணைத்து அற்புதமாக ஓவ...
Comments
Post a Comment