கன்னிக்கோவில் ராஜா அந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு பக்கம் மாட்டுக் கொட்டகையும் இன்னொரு பக்கம் குதிரைக் கொட்டகையும் இருந்தன. மாட்டுக் கொட்டகையில் ஒரு பசுவுக்குக் குட்டிப் பிறந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. மிகவும் துடுக்காகவும் புத்திசாலியாகவும் இருந்தது அந்தக் கன்றுக்குட்டி. அதைப் பொறுத்தவரை அந்தக் கொட்டகைதான் உலகம் என்று நம்பியிருந்தது. கொட்டகையில் இருக்கும் மாடுகளைத் தவிர, உணவு தரும் சுப்பையா என்ற மனிதரை மட்டுமே அது அறிந்திருந்தது. ஒருநாள் காலை அம்மாவிடம் பால் குடித்துவிட்டு, கொட்டகையைச் சுற்றிச் சுற்றி வந்தது. சின்னக் கன்றுக்குட்டி என்பதால் அதைக் கட்டிப் போடாமல் வைத்திருந்தார்கள். அப்போது ’ஹி...ஹி..ஹி’ என்று ஒரு கணைப்புச் சத்தம் கேட்டது. இது என்ன புது சத்தமாகக் கேட்கிறதே! யாருக்காவது உடம்பு சரியில்லையோ என்று நினைத்தது. அருகில் இருந்த கருப்பனிடம் சென்று, “உங்களுக்கு உடம்பு சரியில்லையா? ஏன் தொண்டைக் கட்டிக் கொண்டதுபோல் கத்துறீங்க?” என்று கேட்டது. “எனக்கு உடம்பு நல்லாதான் இருக்கு. நான் கத்தலை” என்றது அந்தக் கருப்பன் மாடு. அடுத்து கொஞ்சம் தள்ளி இருந்த வெள்ளைய...