Posts

Showing posts from December, 2021

கதைகள் செய்யும் மாயம்

Image
 சிறுவர் இலக்கிய பெருமரத்தில் நானும் ஒரு பறவையாய் அமர்ந்துள்ளதை பெரும் பேறாய் நினைத்து மகிழ்கிறேன் வாருங்கள் வாழ்த்துங்கள் நிகழ்வு ஏற்பாடு செய்துள்ள தோழமைகள் Indumathi Umesh , Anbudan Ananthi ஆகியோருக்கு மகிழ்வணக்கம் Dear all, Meet link  https://meet.google.com/yzb-sbgu-gnd Sunday 26 Dec 2021  Timeslot 4.00 - 5.00 p.m.

New Rhymes book

Image
  #lollipopchildrensworld நூல்அறிமுகம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் Geetha Mathi அவர்கள் எழுதி உள்ள சிறுவர்களுக்கான பாடல்கள் மற்றும் கதைப் பாடல்கள் நூல் #கொக்கரக்கோ... விரைவில் குழந்தைகள் கைகளில் தவழ உள்ளது. இவரை அறிமுகம் செய்து வைத்த Kalayarassy Pandiyan அவர்களுக்கு நன்றி. இந்நூல் #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் வெளியாகிறது

Lollipop books

Image
 உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி  இறப்ப நிழற்பயந் தாஅங் கறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்  வான்சிறிதாப் போர்த்து விடும். பொருள்:மிகமிகச் சிறியது ஆலின் விதை. அது மண்ணில் விழுந்து முளைத்துப் பெரிய மரமாகிப் பலநூறு பேர் வந்து தங்க இடமும் நிழலும் தருகிறது. அது போலத்தான் செய்யப்படுகிற நல்லறத்தின் அளவு சிறிதாக இருக்கலாம். ஆனால், அது தக்காருக்குத் தக்க சமயத்தில் செய்யப் பட்டதா யிருப்பின் அதன் பயன் வானத்தைவிட விரிந்தது...உயர்ந்தது. என்கிற #நாலடியார் கூற்றபடி தமக்கு தெரிந்த நண்பரிடம் லாலிபாப் சிறுவர் உலகத்தின் நூல்களை அறிமுகப்படுத்திய கதைசொல்லி KavithaAthai KuttiesKathaigal அவர்களுக்கு நன்றி. இத்தனை நூல்களும் இராமநாதபுரம் சென்றுள்ளன. அங்குள்ள குழந்தைகள் படிக்கவும்.‌‌.. நூலகத்தில் வாசிக்கவும் சிங்கப்பூரில் பணிபுரியும் திரு. விஜயகாந்த் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். அவருக்கும் அவரை அறிமுகம் செய்த கதைசொல்லி கவிதாவுக்கும் லாலிபாப் குழந்தைகள் மற்றும் எழுத்தாளர்கள் சார்பில் வாழ்த்துகள். இந்தச் சிறந்த பணி மற்ற தோழமைகளும் செய்தால் அதிக நூல்கள் திசையெங்கும் பரவும். கன்னிக்கோவில்இராஜா

Book release

Image
 #booksrelease கடந்த ஓராண்டுக்கு மேலாக முகநூல் வழியே நட்புறவை வளர்த்தவர் உமா அபர்ணா அவர்கள்‌. Pachyderm Tales மூலம் வெளியான லதாசங்கர் அவர்கள் எழுதிய "அம்புட்டு ஆசை", "மேரி என்ற மாரி" ஆகிய சிறுகதை நூல்கள் மாலாமாதவன் அவர்கள் எழுதிய " பாதாளக் கரண்டி", "ஆதித்யா ஒன்றாம் வகுப்பு" என்கிற நூல்கள் சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் வெளியிடப்பட்டன. நூல்களை நான் (கன்னிக்கோவில் இராஜா) வெளியிட திருமதி உமா அபர்ணா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஒளிப்படங்கள்: ரவிவர்மா Uma Aparna அவர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக #புத்தகமாலை அணிவிக்கப்பட்டது

4ஆம் வகுப்பு மாணவியின் நூல்

Image
  #Newstorybook #லாலிபாப்சிறுவர்உலகம்  ஈரோட்டில் நான்காம் வகுப்பு மாணவி ச.ச.#சுபவர்ஷினி எழுதிய பதினைந்து கதைகள் அத்தினி காடு என்ற பெயரில் லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது இந்தப் பதினைந்து கதைகளுக்கும் 7  மாணாக்கர்கள் ஓவியம் வரைந்து இருக்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள் தமிழ் சான்றோர்கள் எனப் பலரும் வாழ்த்துரை அளித்துள்ளனர் சமகாலத்தில் சிறுவர் இலக்கியத்தை சிறுவர்கள் படைக்கப்பட்டது பெரும் வரவேற்புக்குரியது.  இந்தப் பெரும் செயலுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் அணிலாக இருப்பது மகிழ்வளிக்கிறது. *** நூல்: அத்தினிக் காடுநூ லாசிரியர்: ச.ச.#சுபவர்ஷினி (9 அகவை: 4ஆம்வகுப்பு) பக்கங்கள்: 104 விலை ₹99/- வெளியீடு: #லாலிபாப்சிறுவர்உலகம் 9841236965

மாணவிகள் எழுதிய நூல்கள்

Image
 வணக்கம் குழந்தைகளுக்காக கதை சொல்வதைக் காட்டிலும் குழந்தைகளை எழுத வைப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு விவசாயின் பெருமகிழ்ச்சி அறுவடையே. அப்படி ஒரு விவசாயியாய் இந்த நூல்களைப் பார்க்கிறேன். கதைப் பயிற்சியில் ஒத்துழைப்பு நல்கிவரும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி மற்றும் பெற்றோருக்கு மகிழ்ச்சியை உரித்தாக்குகிறேன் லாலிபாப் சிறுவர் உலகத்தில் ஏற்கனவே *ஹரி வர்ஷினி ராஜேஷ், கோவை *வர்தினி ராஜேஷ், கோவை *தேவசர்வஷ்யா, அமெரிக்கா *ஸ்ரீநிதி பிரபாகர், அபுதாபி ஆகியோருடன் தற்போது *சு. பிரவந்திகா, சென்னை  *ச.ச.சுபவர்ஷினி, ஈரோடு இன்னும் மூன்று குழந்தைகள் காத்திருக்கிறார்கள்  பட்டியல் நீளும்...