Posts

Showing posts from August, 2019
Image
குழந்தைகளைப் பற்றி எழுதுவது எளிது குழந்தைகளுக்காக எழுதுவது கடினம். = லா.ச.ரா எனக்கு (சப்தரிஷி லா.ச.ரா) குழந்தைகள் கதைகள் படிப்பதில் ஆர்வம் உண்டு.. இன்னும் சித்திரக்கதைகள் பவழத்தீவு...007 பாலு படித்துக் கொண்டுதானிருக்கிறேன் சுபாவின் காட்டு ராஜாவும் காற்றுக்குதிரையும், ஜெயமோகனின் பனிமனிதன் எஸ் ராமக்கிருஷ்ணனின்...ஏழுதலை நகரமும் படித்து ரசித்து சில குழந்தைகளுக்கு வாங்கியும் கொடுத்திருக்கிறேன். இப்பத்தய குழந்தைகள் படிக்கிறார்களோ இல்லையோ நான் இன்னும் ரஷ்யக்குழந்தைகள் கதைகளை படித்துக்கொண்டுதானிருக்கிறேன் .. லா.ச.ரா சொல்வார்..." குழந்தைகளைப்பற்றி எழுதுவது எளிது ..குழந்தைகளுக்காக எழுதுவது கடினம்...ஆனால் ரஷ்யர்கள் இதனை எளிதாகச்செய்கிறார்கள்" இதனை கன்னிகோவில் ராஜாவும் செய்கிறார்..வாழ்த்துக்கள். வாண்டுமாமாஅழ. வள்ளியப்பா.. குழ கதிரேசனுக்குப்பிறகு .... கன்னிகோவில் ராஜா! வாழ்க. வளர்க
Image
கன்னிக்கோவில் ராஜா அந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு பக்கம் மாட்டுக் கொட்டகையும் இன்னொரு பக்கம் குதிரைக் கொட்டகையும் இருந்தன. மாட்டுக் கொட்டகையில் ஒரு பசுவுக்குக் குட்டிப் பிறந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. மிகவும் துடுக்காகவும் புத்திசாலியாகவும் இருந்தது அந்தக் கன்றுக்குட்டி. அதைப் பொறுத்தவரை அந்தக் கொட்டகைதான் உலகம் என்று நம்பியிருந்தது. கொட்டகையில் இருக்கும் மாடுகளைத் தவிர, உணவு தரும் சுப்பையா என்ற மனிதரை மட்டுமே அது அறிந்திருந்தது. ஒருநாள் காலை அம்மாவிடம் பால் குடித்துவிட்டு, கொட்டகையைச் சுற்றிச் சுற்றி வந்தது. சின்னக் கன்றுக்குட்டி என்பதால் அதைக் கட்டிப் போடாமல் வைத்திருந்தார்கள். அப்போது ’ஹி...ஹி..ஹி’ என்று ஒரு கணைப்புச் சத்தம் கேட்டது. இது என்ன புது சத்தமாகக் கேட்கிறதே! யாருக்காவது உடம்பு சரியில்லையோ என்று நினைத்தது. அருகில் இருந்த கருப்பனிடம் சென்று, “உங்களுக்கு உடம்பு சரியில்லையா? ஏன் தொண்டைக் கட்டிக் கொண்டதுபோல் கத்துறீங்க?” என்று கேட்டது. “எனக்கு உடம்பு நல்லாதான் இருக்கு. நான் கத்தலை” என்றது அந்தக் கருப்பன் மாடு. அடுத்து கொஞ்சம் தள்ளி இருந்த வெள்ளைய