Posts

Showing posts from February, 2022

சிறுகதை போட்டி

 நன்னன் குடி நடத்தும்  மானமிகு  இரா செம்மல் நினைவு சிறுகதைப் போட்டி  முதற் பரிசு  1௦௦௦௦/- உருபா {பத்தாயிரம்}            இரண்டாம் பரிசு 5௦௦௦/- உருபா {ஐயாயிரம்}  மூன்றாம் பரிசு 3௦௦௦/- உருபா {மூன்றாயிரம்}  இரண்டு ஆறுதல் பரிசுகள் [ ஒருவருக்கு ] 1௦௦௦/- உருபா {ஓராயிரம்} கீழ்க் காணப் பெறும் விதிமுறைகளுக் கிணங்க 30/04/2022  ஆம் நாளுக்குள் எமக்குக் கிடைக்கப் பெறும் கதைகளுள் ஐந்து சிறந்த கதைகளுக்கு மேற்காணப் பெறும் ஐந்து  பரிசுகளும் வழங்கப்படும்.  " தீதும் நன்றும் பிறர் தர வாரா"    என்னும் புற நானூற்றுப் பாடல் அடியின்  கருத்து பளிச்சென்று தெரியும்படிக் கதை இருக்க வேண்டும்.   பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் இடம் பெறக் கூடாது. பக்க வரையறை கிடையாது.  சிறுகதை இலக்கணம், மரபு ஆகியவை நன்கு அமைந்திருக்க வேண்டும்.   மொழிநடை எளிதாக இருக்கலாம்; ஆனால் அது தமிழாக இருக்க வேண்டும்; பிறமொழி கலப்போ வழுவோ இருக்கக் கூடாது.   எழுத்து அடித்தல் திருத்தல் இன்றி தெளிவாக இருக்க வேண்டும்.  மூன்று படிகள் அனுப்ப வேண்டும்.   படிகளின் அகத்திலோ புறத்திலோ எழுதியவரின் பெயர் போன்றவை குறிப்பாகவும் இடம் பெற்று விடக் கூட

Miyav raja

Image
  மியாவ்_ராஜா குழந்தைகள் உலகம் மிக அழகானது. அதில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வித்தியாசம் இல்லை. அவர்கள் உலகம் கற்பனை வளம் வாய்ந்தது. அவர்களுக்குத் தான் பார்க்கும் எல்லா விசயங்களும் புதியது. அதைத் தொட்டு உணர்ந்து, உடன் பயணித்து, தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கது. அவர்கள் உலகத்துக்குள் சிரம் தாழ்த்தி  (total surrender) நாம் சென்று விட்டால், மகிழ்வுடன் நம்மை அரவணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் காணும், வியக்கும் விசயங்களை மகிழ்வுடன் நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள். வளர.. வளர.. நாம்தான் நம்முள் இருக்கும் குழந்தைத் தன்மையை மறந்து, ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். கடிவாளத்தைப் பிடித்து நிறுத்த முடியவில்லை நம்மால்! ஆனால், கன்னிக்கோவில் இராஜாவுக்கு அது இயல்பாக வருகிறது. குழந்தைகள் உலகத்தில் பட்டாம்பூச்சி போல் பயணப்பட்டு, கதைகளை அள்ளிக் கொண்டு வருகிறார். (கதைசொல்லி தாமரைச்செல்லி அவர்களின் வாழ்த்துரையிலிருந்து)  நூல்: மியாவ் ராஜா (சிறார் கதைகள்) #கன்னிக்கோவில்இராஜா  வெளியீடு: சுவடு பதிப்பகம்

Dinamani Book Review தினமணி நூல் புதிது

Image
தினமணி நூல் புதிது  அத்தினிக் காடு (சிறுவர் கதைகள்) - ச.ச. சுபவர்ஷினி பக்.: 104 | விலை: ரூ.99 வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம் , எண்.28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை 600 018. பேச: 98412 36965  10 வயதுடைய பள்ளி மாணவி தான் இந்நூலின் ஆசிரியர் மொத்தம் 15 கதைகள். 15 கதைகளுக்கான அழகிய ஓவியங்களை 7 சிறுவர்கள் தீட்டி தங்கள் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்கள். லில்லியின் பூனைக்குட்டி,  ராமுவின் நாய்க்குட்டி, குறும்புக்கார வாத்து,  நாயின் நண்பர்கள், புறாவுடன் ஒருநாள், ஊருக்குள் பாண்டா, பட்டாம்பூச்சியின் ரகசியம். மந்திர மரம், மரப்பெட்டி, பச்சை நிற ஆப்பிள், முயலும் என இச்சிறுமி சுபவர்ஷினி இயற்கையோடும் பறவைகளும் வீட்டு விலங்குகளோடும் பேசி மகிழ்ந்த அனுபவங்கள் கதைகளாக இருக்கின்றன. இக்கதைகள் அனைத்தையும் மழலை மொழியில் கேட்டு மகிழ நூலில் QR CODE கூட தரப்பட்டுள்ளது. ஆமாம்... அது என்ன நூலின் பெயர் அத்தினிக் காடு? சொன்னால் சுவாரஸ்யம் போய்விடுமே..  வாங்கிப் படியுங்கள். courtesy: Dinamani Siruvarmani 12.02.2022

Kanavu Meeting

Image
படைப்பு அனுபவ உரை திருப்பூர் - தமிழ்நாடு | இணையவழி 06-02-2022 கனவு மெய்நிகர் சந்திப்பில் படைப்பாளர்களின் அனுபவத்தை பலரும் தெரிந்துக் கொள்ள நிகழ்வு நடத்தப்பட்டது. மாதந்தோறும் பல படைப்பாளர்கள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிப்ரவரி 6, சனிக்கிழமை மாலை எழுத்தாளர்கள் அய்யப்ப மாதவன் (கோவை), கன்னிக்கோவில் இராஜா (சென்னை) நாராயணி கண்ணகி (ஜோலார்பேட்டை) ஆகியேரர் பங்கேற்றனர். மூத்த எழுத்தாளர் பூ. அ. ரவீந்திரன் அவர்கள் நிகழ்ச்சியை சிறந்த கவிதையோடு தொடங்கி வைத்தார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் முன்னிலை பல சான்றேரர்களின் கருத்துரையோடு தூரிகை சின்னராஜ் ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்வில் தன்னுடைய நாவல் அனுபவத்தையும், தான் சார்ந்த மண்ணையும் அங்கு நிலவும் சூழலையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்தார் எழுத்தாளர் நாராயணி கண்ணகி அவர்கள். அவருக்கு பிறகு பேசிய எழுத்தாளர் அய்யப்ப மாதவன், படைப்பாளர்களின் தற்கால யதார்த்த வாழ்வையும், படைப்புகள் குறித்தும், பதிப்பகங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்,. சிறுவர் இலக்கியத்தில் இயங்கி வரும் கன்னிக்கோவில் இராஜா, ஊரடங்கு காலத்தில் சிறுவர்களின்

சிறகில்லாத சிட்டுக்குருவி

Image
 # சிறகில்லாத_சிட்டுக்குருவி "வணக்கம் நண்பரே! நான் சென்னை வந்து இருக்கிறேன்.. கடற்கரை சாலையில் உள்ள சாந்தோம் தேவாலயத்தின் அருகே இருக்கிறேன்" என்ற ஒரு குரல் 15 ஆண்டுகளுக்கு முன்னால் நட்பு குரலாக மாறிப்போனது. அப்போது  வாட்ஸ்அப் இல்லை  முகநூல் இல்லை  குறுஞ்செய்தி எஸ் எம் எஸ் மட்டுமே இருந்தது . அந்த SMSஇல் "கன்னிக்கோவில் இராஜாவின் SMS இதழை" முதலில் நடத்தியவன் என்கிற பெருமை எனக்கு வாய்த்தது. இப்படி சிறகில்லா சிட்டுக்குருவியான கவிஞர் சேகர் கண்ணன்சேகர் ஹைக்கூ இதழாகவும், கண்ணதாசன் சிறப்பு இதழாகவும் நடத்த ஆரம்பித்த காலம்.. இந்த ஊரடங்கு காலம் வரை தொடர்ந்து கொண்டே இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள். பல படைப்பாளிகளை ஏணியில் ஏற்றி அழகு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. இந்த ஈராயிரத்து இருபத்து இரண்டாம் ஆண்டில் (2022) நான் எழுதிய ஹைக்கூகளை #கவிச்சூரியன் மின் இதழில் பதிவு செய்திருப்பது பழைய நினைவுகளை தூண்டி விட்டது. கவிஞருக்கும் இதழ் ஆசிரியருமான நண்பருக்கு இனிய வாழ்த்துக்கள் தொடர்ந்து கவிஞர்களை மெருகேற்றும் இவரைப் போன்ற சிற்றிதழ் ஆசிரியர்களுக்கு என் சிரம் தா

படைப்பு இலக்கிய விருது - 2021

Image
 https://padaippu.com/announcement/40 படைப்பு இலக்கிய விருது - 2021 https://padaippu.com/announcement/40 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்... நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவித்து வருகிறது படைப்புக் குழுமம். அதனடிப்படையில் கடந்தாண்டுகளில் நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவித்து அந்தாண்டின் சிறந்த படைப்பாகவும் / படைப்பாளியாகவும் தேர்வு செய்து அவர்களை நம் ஆண்டு விழாக்களில் வைத்து சிறப்பித்தோம். அதே போல இந்தாண்டும் (2021 ஆண்டு) நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவிக்க காத்திருக்கிறது படைப்பு குழுமம். தயவு செய்து முழுதும் கவனமாக படித்து விட்டு பிறகு சந்தேகங்கள் இருப்பின் தகவல்(கமெண்ட்ஸ்) பகுதியில் கேக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும். இது முற்றிலும் நூல

புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டி-2022

Image
 யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற இப்போட்டி, எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பெயரில், ‘புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டி-2022 ’ என அறிவிக்கப்படுகிறது. நோக்கம் *********** புதிய படைப்பாளர்களைக் கண்டுபிடிப்பது,  படைப்புத் திறனை ஊக்குவிப்பது, படைப்பு வெளியை விரிவடையச் செய்வது, வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பது. விதிமுறைகள் ***************** இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப முடியும். நாவலின் அளவு குறைந்தபட்சம் 30000 வார்த்தைகள் முதல் 36000 வார்த்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். நாவல்கள் எந்த வகைமையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். (சமூகம், அரசியல், சூழலியல், பின்நவீனத்துவம், அறிவியல், வரலாறு, யதார்த்தவாதம் அல்லது கற்பனாவாதம், துப்பறியும் கதை உள்ளிட்ட வகைமை..) நாவலை மின்னஞ்சலில்  யூனிகோட்  வடிவத்தில் மட்டுமே (WORD.DOC)  அனுப்ப வேண்டும்.  கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் (PDF) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நாவல் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: puthumaipithan.award@gmail.com படைப்பினை அனுப்புவதற்கு கடைசி நாள் ஜூன் 30 ஆம் தேதி, 2022. போட்டி மு