Posts

Showing posts from June, 2022

#கரடி_டாக்டருக்கு_பரிசு

Image
  #கரடி_டாக்டருக்கு_பரிசு அருந்தமிழ்க் கவிமுகில் 50 வது பிந்தநாள் விழாவில் சிறார் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற நிவேதிதா பதிப்பகம் பதிப்பித்த #கரடி_டாக்டர் நூலிற்காக எழுத்தாளர் #கன்னிக்கோவில் #இராஜாவுக்கு ரூபாய் 5000 ரொக்கப் பரிசினை காவல்துறை கூடுதல் இயக்குனர் (தொடரித்துறை) வி. #வனிதா இ.கா.ப. அவர்கள் வழங்கினார். உடன் கவிஞர்கள் கவிமுகில், தங்கம் மூர்த்தி மற்றும் பலர். அந்த நேரத்திலும் சிறப்பு விருந்தினர்களிடம் கன்னிக்கோவில் இராஜாவை அறிமுகப்படுத்திய இனிய தோழமை கவிஞர் #தங்கம்மூர்த்தி அவர்களுக்கு நன்றி.

#நூல்களைக்_காக்கும்_நூலகர்

Image
  #நூல்களைக்_காக்கும்_நூலகர் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வெளிவருகிற சிறுவர் இலக்கியம், பிற இலக்கியம் என பல நூல்களை வாங்கி அதனை தனது சொந்த செலவில் கணிப்பொறியில் (பல்லாயிரக் கணக்கான நூல்களை) பதிவேற்றம் செய்து வருகிறார் 88 வயது இளைஞரான நூலகஞானி #பெருமாள் ஐயா அவர்கள் அவரின் சேவையை நான் எழுதிய நூலில் ஒரு பக்கத்தைக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இது ஒரே ஒரு துளிதான். ஆனாலும் எனக்கு மகிழ்ச்சி. இவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்த தோழமை நிவேதிதா பதிப்பகம் உரிமையாளர் #தேவகிராமலிங்கம் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி. இன்று அந்த நூலை அவரிடம் ஒப்படைக்கும் போது ஒரு குழந்தையை தூக்குவது போல போல பெற்றுக் கொண்டார். ஒளிப்படத்தில் என்னோடு கவிஞர் #ஹாரிங்டன்_அரிகரன்

சிறார் கதைகளை எழுதிய படைப்பாளர்கள்

Image
  வெளிவந்து விட்டது - 'காணாமல் போன சிறகுகள்' – சிறார்க் கதைத் தொகுப்பு.. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07-11-2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி ஒன்றை அறிவித்தோம். அப்போட்டியில் பரிசு வென்றவர்களுக்குப் பரிசு அளித்து ஊக்கப்படுத்தினோம். மேலும் பரிசு வென்ற கதைகளைத் தொகுத்து ஆவணப்படுத்தும் எண்ணத்துடன், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு யர விரும்பினோம். அப்பணி இனிதே நிறைவடைந்து நூல் வெளிவந்து விட்டது என்பதை அறிவிப்பதில் மகிழ்கின்றோம். கதைகளை எழுதிய சிறார் படைப்பாளர்களுக்கு, ஒரு பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதில் 12 சிறுவர்கள் எழுதிய கதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. கதைகளை நன்றாக உள்வாங்கி, இவற்றுக்கு 13 மாணவர்கள் வரைந்த பொருத்தமான, அழகான கருப்பு வெள்ளை ஓனியங்களும் இடம் பெற்றுள்ளன. சிறார் ஓவியர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்! முதல் பரிசு பெற்ற 'அனுக்கிரஹா கார்த்திக்" எழுதிய கதையின் பெயரே, புத்தகத்தின் தலைப்பாகத்

இளம் எழுத்தாளரை வாழ்த்தலாம் வாங்க

Image
இளம் எழுத்தாளரை வாழ்த்தலாம் வாங்க 23 அன்புடன் ஆனந்தி, Kalayarassy Pandiyan and 21 others 7 comments 6 shares Like Comment Share  

வட அமெரிக்கா பொது நூலகத்தில் கன்னிக் கோவில் இராஜாவின் புத்தகங்கள்*

Image
 *வட அமெரிக்கா பொது நூலகத்தில் கன்னிக் கோவில் இராஜாவின் புத்தகங்கள்* சிறுவர் இலக்கிய உலகில்  எனக்கு அறிமுகமான நல்ல நட்பு  சிறுவர் இலக்கியச் செம்மல் திரு. *கன்னிக்கோவில் இராஜா* அவர்கள் எழதிய 16 புத்தகங்கள்  இன்று வட அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் *ராச்செஸ்டர் ஹில்ஸ் பொது நூலகத்தில் Rochester Hills Public Library*  வைக்கப்பட்டு உள்ளது என்பதை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். அருமையான அறக் கருத்துகளையும்,  அறிவியல், சுற்றுச்சூழல் கருத்துகளையும் இளைய தலைமுறையினர் எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து தனது சிறந்த படைப்புகளை வழங்கி வரும் சிறந்த எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். தங்கள் இலக்கியப் பணி மென்மேலும் சிறக்க இறை அருளட்டும். *நெல்லை அன்புடன் ஆனந்தி* மிச்சிகன், வட அமெரிக்கா 2022.06.15

கொ. மா. கோதண்டம் ஐயாவின் பாராட்டு

Image
 #சான்றோர் வாக்கு https://youtu.be/Nm-e0R3zqb8 இன்னைக்கு காலையில மக்கள் தொலைக்காட்சியில உங்க பாட்டு போட்டாங்க. அதுவும் ஒவ்வொரு வரியும் ரெண்டு தரம் படிச்சு, பாட்ட மறுபடியும் ரெண்டாந்தரம் போட்டாங்க. வரிகள் எளிமையா இருந்துச்சு. பாடுனவங்க சிறப்பா பாடுனாங்க. பாப்பா கனவுல பாம்பு வந்துச்சுன்னு அழுதா அம்மா சேலையைப்  பிடிச்சுகிட்டு தூங்கினா ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு பார்க்கிறதுக்கு. ரெண்டு தரம் போட்டதால மனசுக்கு திருப்தியா, பெருமையா இருந்துச்சு. ரொம்ப இயல்பா எழுதி இருக்கீங்க. வாழ்த்துகள். "அப்புறம் சமீபத்தில என்ன புத்தகம் எழுதினீங்க?" "கரடி டாக்டர்", "வித்தை செய்யும் நத்தை" இரண்டு நூல் வந்திருக்கு ஐயா தலைப்பே அருமையா இருக்கு. வாழ்த்துகள். "வீட்ல எல்லாரும் நலமா இருக்காங்களா?" "நலமா இருக்கோம் ஐயா" சரி.சரி அப்புறம் பேசறேன் .....