Posts

Showing posts from July, 2019

butterfly angel

Image
நூல் விமர்சனம் நிர்மலாதேவி பன்னீர்செல்வம் மலேசியா. நூல் : பட்டாம்பூச்சி தேவதை நூலாசிரியர் : கன்னிக்கோவில் இராஜா வெளியீடு : பாவைமதி வெளியீடு, எண். 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு,தண்டையார்ப்பேட்டை, சென்னை - 600 081. ணூ94441 74272 112 பக்கங்கள்  விலை ₹100/- பட்டாம்பூச்சியைப் பிடிக்காதக் குழந்தைகள் இலர். அவ்வகையில், கதாசிரியர் அவர்கள் குழந்தைகள் அதிகம் விரும்பும் பட்டாம்பூச்சியையே தன் கதையின் நாயகியாகத் தேர்ந்தெடுத்திருப்பது மிகச் சிறப்பு. மனிதனுக்கு மனம் இருப்பதைப் போல பிராணிகளுக்கும் இதயம் உண்டு என கதை அழகாகக் கூறுகிறது. தன் அன்றாட வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மனிதன் எத்தனை பாடுபடுகிறானோ, அதுபோல பிராணிகளும் தனது வயிற்றுப்பசியைப் போக்குவதற்கு எத்தனை இடர்பாடுகளை ஒவ்வொரு நாளும் கடக்கின்றன என்பதை இக்கதையின் வழி நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. மென்மையான பட்டாம்பூச்சிக்கு கதையில் எதிரியாக முரலும் வண்டினை தேர்ந்தெடுத்திருப்பது மிக பொருத்தமாக அமையப்பெற்றுள்ளது. அவை இரண்டுக்கும் நடக்கும் உரையாடல்கள் மிக இயல்பாகவும் குழந்தைத்தனமாகவும் எழுதப்பட்டிருப்பது, நிச்சயம் இக்கதையை
Image
நூல் விமர்சனம் எழுத்தாளர் கவிச்சுரபி சுப. சந்திரசேகரன் ஆசிரியர்: மின்னல் தமிழ்பணி இதழ், சென்னை நூல் : சப்போட்டா (சிறுவர் கதைகள்) நூலாசிரியர் : கன்னிக்கோவில் இராஜா வெளியீடு : வானம் பதிப்பகம், எண். வி22, 6வது அவென்யூ, அழகாபுரி நகர், இராமாபுரம், சென்னை - 600 089. cell: 91765 49991 80 பக்கங்கள்  விலை ₹50/- கன்னிக்கோவில் இராஜா எழுதிய ‘சப்போட்டா’ சிறார் கதைகள், படிக்க.. படிக்க... மனத்திற்கு பரவசம் தந்தது. கதைகளோடு மூழ்கிப் படித்து அதனோடு ஒன்றிவிட்டபோது குழந்தைகளுக்கு ஏற்பட்டக் குதூகலம்தான் ஏற்பட்டது. முப்பது நிமிடம் நான் என்னை மறந்து சிறுவனாகிவிட்டேன். கதைபோகும் போக்கும், கதை சொல்லும் விதமும் கன்னிக்கோவில் இராஜாவின் எழுத்தும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டி வசப்படுத்துகிறது. சிறுவனாகவே இருந்து விடக்கூடாதா என்றும், அப்படியே அந்த மகிழ்ச்சி உலகத்தில் மெய் மறந்து நிம்மதியாய் இருந்துவிடலாம். பத்துக் கதையும் முத்துக்கதைதான். சிறார்களின் சொத்துக் கதைதான். பெரியவர்களுக்கும் வித்துக் கதைதான். நடை இயல்பாக இருப்பதால் எளிதாகப் படிக்க முடிகிறது. முடிவில் ஒரு பாடம் கற்பிக்கிறது. முதல் க