Posts

Showing posts from March, 2023

Book seeds

Image
 *புத்தக விதை* எங்கெங்கு குழந்தைகள் படிக்கின்றனரோ அங்கெல்லாம் புத்தகங்கள் விதையைத் தருகின்றன. அண்மையில் குடும்பத்தினரோடு தமிழ்நாட்டுக்கு வந்த மலேசியாவை சேர்ந்த நல்லாசிரியரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். நம்மில் பலருக்குச் சந்திப்பு என்பது உற்சாகம்; எனக்கு நல்லுரம். இந்தச் சந்திப்பும் அப்படித்தான். இல்லத்துக்கு வந்திருந்தவர்களின் கரத்தில் புத்தகக் குவியலை அளித்தேன் அதைப் பிறந்த குழந்தையைப் பெறும் லாவகத்தோடு பெற்றுக் கொண்டனர். *திருமதி.புனிதா - திரு. பிரகாஷ்* இணையர் கொசுராக ஐந்தாம் ஆண்டுப் பயிலும் மாணவி *திவ்யஸ்ரீ பிரகாஷ்* இணைந்திருந்தது பெருமகிழ்ச்சி. தமிழ்நாட்டில் இருந்து விமானம் வழியாக மலேசியா சென்ற புத்தகங்கள் மலேசிய தமிழ் குழந்தைகளின் கைகளில் தவழ்ந்தது ஒளிப்படங்களின் வழியே உரமேற்றியது. கதைகள் என்ன செய்யும்? என்கிற வினாக்களுக்கு விடையே குழந்தைகளின் வாசிப்பு; கற்பனை சக்தி; கேள்விகளில் துணிவு; தன்னம்பிக்கை; தைரியம் என வாசிக்க வாசிக்கப் புத்தகங்கள் அத்தனை விதைகளையும் அவர்களின் மனதில் பரப்பும் என்பது நதியின் ஓட்டம் தானே. இந்த விதைகளை மாணவர் மனங்களில் பரப்பிய *நல்லாசிரியர் புனிதா சுப்ரமண

வாங்க தெரிஞ்சுக்கலாம்-03

Image
வணக்கம் நண்பர்களே ஒரு படைப்பாளியின் படைப்பு வெளிவந்தவுடன் அது குறித்த அறிமுகம் விமர்சனம் எனத் தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் அது உயிர்ப்புடன் இருக்கும் அந்த வகையில் அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் #நெல்லை #அன்புடன்ஆனந்தி மற்றும் பெங்களூருவில் வசிக்கும் பேராசிரியர் #தாமரைச்செல்வி இணைந்து #வாங்க #தெரிஞ்சுக்கலாம் என்ற தலைப்பில் மாதம் தோறும் #கன்னிக்கோவில்இராஜா எழுதிய சிறார் புத்தகங்களை அலச தொடங்கி இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சி குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை  பாகம்:03 #காண்டாமிருத்தின்_பேபிசோப்பு சிறார் கதைகள் குறித்து தெரிஞ்சுக்கலாம் வாங் காண்க: 01 #பிடிங்க_பிடிங்க_மயில்முட்டையைப் #பிடிங் https://www.youtube.com/live/40K77LGfJrU?feature=sha 02 #பட்டாம்பூச்சி_தேவதை https://www.youtube.com/live/DcEIg--eNz8?feature=sha Anbudan Ananth Thamarai Selvi Elamaran Perumal

Malaysia -India, Tamilnadu

Image
 *அன்புஈனும் ஆர்வம் உடைமை*milnadu *இந்தியா, தமிழ்நாடு என்றாலே அது கன்னிக்கோவில் இராஜா மாமாதான்* சென்ற வாரம் மலேசிய ஆசிரியை *திருமதி. புனிதா சுப்பிரமணியம் (தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்).* ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். மலேசிய பள்ளியில் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்வுக்காக தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்திருந்தார்களாம்.  *"நம்முடன் கலந்துரையாடல் செய்யப் போவது கன்னிக்கோவில் இராஜா மாமாவா?"* என்று புனிதா ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்டார்களாம். "இப்போது கலந்துக்க போவது மாமா இல்லை; ஒரு பள்ளி ஆசிரியர். மாமாவை இன்னொரு நாள் அழைக்கலாம்" என்று கூறியிருக்கிறார். *"ஓ. சரி"* என்று சொல்லி இருக்கிறார்கள் மாணவர்கள். "அண்ணா! எல்லோரும் உங்களை பார்க்க ஆவலாக இருக்காங்க; மாணவர்கள் மத்தியில் *இந்தியா, தமிழ்நாடு என்றாலே அது கன்னிக்கோவில் இராஜா மாமா என்பதாகவே பதிவாகிவிட்டது*" என்றார் புனிதா ஆசிரியை. இதைக் கேட்டதும் வள்ளுவப் பெருந்தகை எழுதிய *உலகப் பொதுமறை திருக்குறளின் அதிகாரம்-8 அன்புடைமை* தலைப்பில் அமைந்த திருக்குறள் ஒவ்வொன்றாக என் மனப்

#ChennaiBookFair2023

Image
 #ChennaiBookFair2023  நேற்று நண்பர் இயக்குனர் கவிஞர் #ராசிஅழகப்பன் அவர்களின் #வான்உயர்ந்தஆதுரசாலை நூல் வெளியீட்டு விழாவிற்காக #காக்கைக்கூடு (அரங்கு எண்: 589) சென்றிருந்தேன் அங்கு புன்னகை பூ ஒன்று தனது தந்தையோடு வந்திருந்து. தனது கையில் 21ஸ்டார் போட்டு இருந்ததை ஒவ்வொன்றாக எண்ணினாள் அந்த மகிழ்வில் நானும் ஒரு ஸ்டாரை போட்டு 22 என்றேன். சற்று நேரத்தில் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து, அப்பாவை பார்த்து "வேண்டும்" என்றாள் "சரி" என்றார் அப்பா. "நான்தான் எழுதினேன்" என்றேன் என்னை ஒரு பார்வை பார்த்தாள் தீயா வாழ்த்தி எழுதி கையொப்பமிடச் சொன்னார் அப்பா கையொப்பம் போட்டு தந்தேன். திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் தியா. பில் போடும்போது அருகில் வந்த #பாவையர்மலர் இதழின் ஆசிரியர் #வான்மதி தன் பங்கிற்கு ஒரு ஸ்டாரை போட்டு 23 ஸ்டார் என்றார். மகிழ்ந்தாள் தியா ஒரு இளம் வாசகியை சந்தித்த மகிழ்வில் விடைபெற்றேன்

Drama day

Image
*நல்லா_நடிங்க_பாஸ்* *உலக_நாடக_நாள்* அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வின் விடுமுறையில் அத்தை ஊருக்கு செல்வவேன். அங்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் நாடகம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஏற்கனவே வழக்கத்தில் இருந்த நாடகத்தை எடுத்து அதில் கொஞ்சம் என் கற்பனையை இணைத்து ஊர் நண்பர்களோடு இணைந்து நடித்துக் காட்டுவேன். குழுமியிருந்த மக்களே எங்களின் பெருவாசகர்கள். பள்ளியில் இரண்டு முறை நாடகத்தில் நடித்த அனுபவம் உண்டு. இலக்கியத்திற்கு வந்த பிறகு (ஆரம்பத்தில்) சிறார் நூல்களை வெளியிடும் விழாவில் குழந்தைகளை வைத்து நாடகத்தை நடத்துவேன் .. அவ்வாறு ஒரு முறை அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு நான் எழுதிய சிறார் கதையான *கஜாவின் தாகம்* என்பதை நாடகமாக நடத்தினேன். அதில் என் குழந்தைகள் இருவரும் யானைகளாக நடித்தார்கள். அந்த நாடகத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியவர் *திரைப்பட இயக்குனர் எஸ்_பி_முத்துராமன்* அவர்கள். (உனக்கு இயக்குனராகத் தகுதி உண்டு என்று வாழ்த்தினார்) அதில் ஒரு பெண் யானைக்குக் குரல் கொடுத்தவர் *கவிஞர் செல்லம் பாலா அவர்களின் மனைவி.* சன் தொலைக்காட்சியில் ஒரு நாடத்திற்கு அனைத்து தேர்விலும் வெற்றி பெ

புனையினும் புல்என்னும் நட்பு

Image
 *புனையினும் புல்என்னும் நட்பு* கொரோனா காலத்தில் சங்க இலக்கிய ஆய்வு மன்றம் நடாத்திய நிகழ்வில் சிறார் *எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ* புத்தகத்தை ஒருவர் ஆய்வுரை செய்தார். அந்த ஆய்வுரை என் மனதுக்கு நெருக்கமானது. அதனால் அந்த அமைப்பில் தொடர்பு கொண்டு அவரின் எண் வாங்கிக் குழந்தை இலக்கியத்தின் சார்பில் அவருக்கு நன்றி சொன்னேன். அதன் பிறகான காலகட்டத்தில் தொடர்ந்து குழந்தை இலக்கியம் நூல்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அன்றிலிருந்து இன்று வரை *லாலிபாப் சிறார் உலகத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இயங்கி வருகிறார்.* பெங்களூருவில் 'Tale Tribe' அமைப்பின் மூலம் தன் அண்ணி திருமதி. ஜெயந்தி அவர்களோடு இணைந்து சிறாருக்குத் தமிழ் & ஆங்கிலக் கதைகளைச் சொல்லி வருவதோடு சிறந்த நூல்களையும் அறிமுகப்படுத்துகிறார். என் பல கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி வருகிறார். அவர்தான் குழந்தைகள விரும்பும் *கதைசொல்லி தாமரைச்செல்வி* அவர்கள். இன்று சென்னை வந்தவரை, நான் அதிகம் விரும்பும் *நாகேஸ்வரராவ் பூங்காவில்* சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. (இந்தப் பூங்காவில் தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அமர்ந்து பல கவிதைகள