Posts

Showing posts from April, 2022

Nooleni Noolkodai

Image
  நூலேணி நூல்கொடை திட்டத்தின் வாயிலாக மலேசியாவில் வசிக்கும் நல்லாசிரியர் புனிதா சுப்ரமணியன் அவர்கள், வாழப்பாடி, ஜம்பூத்துமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நூல் கொடை அளித்தார். தலைமை ஆசிரியர் திரு. கலைச்செல்வன் அவர்களின் மூலம்  மாணவர்களுக்கு புத்தகங்கள்அளிக்கப்பட்டன. அவர்கள் வாசிக்க ஆரம்பித்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது.  நூல்களை கொடை அளித்த மலேசியா ஆசிரியர் புனிதா அவர்களுக்கும், நூல்களை எழுதி லாலிபாப் சிறுவர் உலகத்தில் வெளியிட்ட எழுத்தாளர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும், படித்துப் பயன்பெற உள்ள மாணவச் செல்வங்களுக்கும் நூலேணி நூல்கொடைத் திட்டம் மற்றும் லாலிபாப் சிறுவர் உலகம் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  மகிழ்ச்சி பரவட்டும். கன்னிக்கோவில் இராஜா - நெல்லை அன்புடன் ஆனந்தி

Book Release Makkal Kural Kannikovil Raja

Image
குழந்தைகள் வெளியிட்ட புத்தக விழா சென்னை,  ஏப்10-   பன்னாட்டு குழந்தைகள் புத்தக நாளில் நிவேதிதா பதிப்பகம் பதிப்பித்த, எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா எழுதிய “விளையாட்டை நிறுத்திய தும்பிகள்” சிறுவர் கதைகள் நூல் சென்னையை அடுத்த மேல்மருவத்தூர் சோத்துப்பாக்த்தில் வெளியிடப்பட்டது. நூலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிட, ஏழாம் வகுப்பு மாணவர்கள் பெற்றுக் கொண்டார்.   மாணவர்கள்: ந.தீப்ஷிகா, தா. ராகுல் கிருஷ்ணா, தா. தேவ் கிருஷ்ணா, செ.அனந்த்ராஸ்ரீ, ஜீ. மைத்ரேயி, ச.ச. சுபவர்ஷினி ஆகியோரை நூலாசிரியர் கன்னிக்கோவில் இராஜா வாழ்த்தினார். 

Dinamani Siruvarmani Children's Book Review

Image
 பட்டாம்பூச்சி தேவதை - சிறுவர் கதைகள் | கன்னிக்கோவில் இராஜா | பக்.: 112 |  விலை: ரூ.120 வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம்,  அபிராமபுரம் முதல் தெரு, சென்னை 600 018. பேச: 98412 36965 இருவர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் அவர்களைப் பார்த்து ‘பூனையும் எலியும் போல இருக்கிறார்கள்’ என்பது வழக்கம். ஆனால் இந்த எலிகள் எப்படி பூனையிடம் பயமில்லாமல் கதைகள் கேட்டன... வியப்பாக இருக்கிறதல்லாவா? தன் பாட்டி மியாவ் சொன்ன ஐடியாவைக் கேட்டு எலிகளுக்குக் கதை சொல்லத் தொடங்கி இறுதியில் பூனை எப்படி மனம் மாறுகிறது என்பதுதான் ‘பூனையிடம் கேட்ட எலிகள்’ கதை. ‘எத்தனை முறை அழித்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் உருவாக்குவோம்’ என்பதை வண்டுக்கு உணர்த்தி, வண்டை மனமாற்றம் செய்ய வைக்கிறது. ‘பட்டாம்பூச்சி தேவதை’ கதை. உண்மையிலேயே நம் மனத் தோட்டத்திலும் தேவதையாகவே வலம் வருகிறது இந்தப் பட்டாம்பூச்சி. நமது இயல்பான உணவு முறையை மாற்றும்போது நம் உடல் அதை ஏற்க மறுத்து, தேவையில்லாத சிக்கல் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெடும் என்பதைப் புரிய வைக்கும் ‘அம்மாவிடம் சொல்லிவிட்டு போ’ கதை அறிந்துகொள்ள வேண்ட

புதிய புத்தகம் பேசுது, ஏப்ரல் 2022

Image
 நான் வாசித்தேன் நீங்கள்? - ஆயிஷா இரா. நடராசன் நெல்மரப் பறவை - கன்னிக்கோவில் இராஜா நிவேதிதா பதிப்பகம் ரூ.100/ கன்னிக்கோவில் இராஜா சிறார் கதையாளர்களில் இன்று குறிப்பிடத்தக்கவர். சென்னைவாசி. தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்பு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நான் அறிந்த வரையில் சிறந்த கதைசொல்லி. இந்தத் தொகுப்பு குழந்தைகளுக்காக அவர் எழுதிய ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு.  தங்கள் குஞ்சுகளின் உணவருந்தும் இடத்தில் புறாக்களும் சாப்பிட வருகின்றன இதுகுறித்து குஞ்சுகள் விவாதிக்கின்றன. உணவு அனைவருக்கும் பொது. நம்மை விரட்டிவிட்டு அவர்கள் சாப்பிட்டால் தவறு, சேர்ந்து சாப்பிடுவதில் தவறில்லை என்று அம்மா கோழி சொல்வது அருமை. எறும்புகள் குடியிருப்பு, கட்டுப்போட்ட முயல், அம்மாவைக் காணோம் போன்றவை குழந்தைகள் விரும்பி வாசிக்கத்தக்க எளிய நடை கதைகள். நெல்மரப்பறவை கதை நம் கல்வியில் பலவீனத்தை சுட்டும் அழகான கதை. பாடத்தில் வருவது, காதால் கேட்பது இவற்றை எல்லாம் விட நேரில் அனுபவிப்பதே மெய் என்பதை சொல்கிறது. ஓவியர் ஜமால் இந்த நூலுக்கு அற்புத தத்ரூப படங்களால் உயிர்ப்பு ஊட்டி இருக்கிறார். - புதிய புத்தகம் பேசுது, ஏப்

மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றம்

Image
மேலக்காண்டை மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றம் சார்பி ல் நடைபெற்ற முப்பெரும் விழாவில் லாலிபாப் சிறுவர் உலகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்தம் சாதனைகளை மையப்படுத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு அரிமா மதியழகன் அவர்கள் தலைமை தாங்கினார்  கவிஞர் தமிழ்பிரியன், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தமிழ் அமுதன் அவர்கள் மற்றும்  குழுவினர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழகத்தின் பல பகுதியில் இருந்து வந்திருந்த குழந்தைகள் தங்களது தனித்திறமைகளை கலை நிகழ்ச்சியாக செய்து காட்டியது பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக இனிய வாழ்த்துகள். நாள் 2.4.2022 இடம்: AVK மஹால், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர்.