Posts

Showing posts from September, 2021

சிறுவர் கதைப்பாடல் நூல்கள்

Image
 லாலிபாப் சிறுவர் உலகம் தொடங்கி ஓராண்டை கடந்துவிட்டது. அந்த குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதைப்பாடல் நூல்கள் இவை நான்கு நூல்களை கடந்து தற்போது "மொச.. மொச.. முயல்குட்டி" என்ற ஐந்தாவது நூலுக்கான பாடலை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிற #குழந்தைகளுக்கும்  நான் எழுதுகிற பாடலை இனிய குரலால் பாடி மகிழ்விக்கும் கவிஞர் நெல்லை #அன்புடன்ஆனந்தி அவர்களுக்கும்  இந்தப் பாடல்களை ஊடகம் வாயிலாக பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கிற #மக்கள்_தொலைக்காட்சிக்கும் என்னுள் இருந்து எழுத வைத்துக் கொண்டிருக்கும் #தாய்_தமிழுக்கும் மனம்கனிந்த நன்றி. நம் குழந்தைகளுக்கு இதுபோன்ற நூல்களை வாங்கி பரிசளிப்போம்.

மரக்குதிரை

Image
  #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் புதிய_முயற்சி சிறுவர் இலக்கியத்தில் பலரின் பங்களிப்பு அளப்பரியது. புதுவையைச் சேர்ந்த கவிஞரேறு #வாணிதாசன் அவர்கள் குழந்தை இலக்கியத்திற்காக பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களில் இருந்து சிலவற்றை தொகுத்து * #மரக்குதிரை தலைப்பில் வெளியிடுகிறோம். லாலிபாப் குழந்தைகள் பாடும் இவரின் பாடல் காணொளியை QR code வடிவில் மாற்றும் பணி நடைபெறுகிறது. இளைய சமுதாயத்திற்கு இவர்களின் பாடல்களைக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் #லாலிபாப் சிறுவர் உலகம் மூலம் ஈடுபட்டுள்ளோம். *** தங்களால் இயன்ற அளவு நூலைப் பெற்று மாணவர்களுக்கு பரிசளிக்கலாமே... **" இதற்கு உறுதுணையாக இருந்த கவிஞரேறு வாணிதாசன் அவர்களின் பெயரன் திரு.முருகன் Murugan Murugan அவர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக நன்றி கவிஞரேறு வாணிதாசன் (சூலை 22 1915 - ஆகத்து 7, 1974) புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். மேலும் தகவலுக்கு https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%

இன்று தினமணி சிறுவர்மணியில் லாலிபாப் சிறுவர் உலக நூல்கள் அறிமுகம்.

Image
  இன்று தினமணி சிறுவர்மணியில் லாலிபாப் சிறுவர் உலக நூல்கள் அறிமுகம். நன்றி: தினமணி
Image
  சிறுவா  கதைப்பயிற்சி 2.6 ஒவ்வொரு வாரம் கதை பயிற்சி மூலம் பல குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த கேட்ட அனுபவ செய்திகளை கதையாக மாற்றுகிறார்கள். இந்த நிகழ்வில் குழந்தைகளோடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களது கருத்துககளை பகிர்ந்தனர். ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பிய மகிழ்ச்சியுடன் பயணிக்கிறோம். வாருங்கள் இளைய தலைமுறைக்கு இயற்கையை கதை வழியாக அறிமுகப்படுத்துவோம்.
Image
  கதைப்பயிற்சி 2.5 ஒவ்வொரு வாரம் கதை பயிற்சி மூலம் பல குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த கேட்ட அனுபவ செய்திகளை கதையாக மாற்றுகிறார்கள். இந்த நிகழ்வில் குழந்தைகளோடு திருச்சியிலிருந்து லதா ஆசிரியர் (Latha balaj அவர்களும், பெங்களூருவில் இருந்து முனைவர் தாமரைச்செல்வி (Thamarai Selvi அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களது கருத்துககளை பகிர்ந்தனர். ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பிய மகிழ்ச்சியுடன் பயணிக்கிறோம். வாருங்கள் இளைய தலைமுறைக்கு இயற்கையை கதை வழியாக அறிமுகப்படுத்துவோம்.

Kids English story

Image
* கதைகேளு கதைகேளு * இன்று பெங்களூரில் * Tale Tribe * 's story session அமைப்பு மூலம் எனது (கன்னிக்கோவில் ராஜா) * "பிடிங்க... பிடிங்க.. மயில்முட்டையைப் பிடிக்க" புத்தகத்தில் உள்ள இரண்டு கதைகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம் பொம்மைகளை வைத்து, ஆங்கிலத்தில் சொல்லி இருந்தார் கதைசொல்லி தாமரைச்செல்வி அவர்கள். * தமிழ்நாடு கர்நாடகா மற்றும் மலேசியா குழந்தைகள் இதை ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தார்கள். எனது கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி குழந்தைகளோடு குழந்தையாக்கிய கதைசொல்லி தாமரைச்செல்வி அவர்களுக்கு * லாலிபாப் சிறுவர் உலகம் * சார்பில் பெருமகிழ்ச்சி நன்றி.

Kalam's Proverbial Stories for Children

Image
  குழந்தைகளுக்காக நானெழுதிய " #அப்துல்கலாம் பொன்மொழிகள் கதைகள்" நூல் முனைவர் #அகல்யா அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு #BlueRose Delhiபதிப்பகத்தில் வெளியாகி உள்ளது. இப்போது #Amazon இணையத்திலும் கிடைக்கிறது. https://bluerosepublishers.com/product/kalams-proverbial-stories-for-children/ https://www.amazon.in/.../ref=cm_sw_r_cp_apa_glt_fabc... BLUEROSEPUBLISHERS.COM Kalam's proverbial stories for children | BlueRose | SELF-PUBLISHING PLATFORM Kalam’s Proverbial Stories for Children is a collection of twelve short stories in translation. Each story reflects the noble ideas Kalam sowed in the hearts of the youth, for building the self and a better India. The simple and straight forward moral woven into these stories would make great read...

கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷினி இராஜேஷ்

Image
லாலிபாப் சிறுவர் உலகத்தில் குழந்தைகளுக்கான கதைப் பயிற்சி அளித்து வருகிறேன். அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணாக்கர்களின் கதைகள் பல இதழ்களில் வெளிவருவது மகிழ்வளிக்கிறது. கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷினி இராஜேஷ் தனது 9வது வயதில் 9 நூல்களை எழுதி, அந்நூல்களை கோவையைச் சுற்றி 9 இடங்களில் வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார். கதைகளுக்கு அவரின் சகோதரி வர்த்தினி இராஜேஷ் ஓவியங்கள் வரைந்துள்ளார். இந்த சகோதரிகளின் சாதைனயை #லாலிபாப்_சிறுவர்_உலகம் பாராட்டி மகிழ்கிறது. 17 Anbudan Ananthi, Umayavan Ramasamy and 15 others 1 comment Like Comment Share

லாலிபாப் சிறுவர் உலகம் வழங்கும் கதைப் பயிற்சி

Image
  *லாலிபாப் சிறுவர் உலகம் வழங்கும் கதைப் பயிற்சி* ஞாயிறு ஆகஸ்ட் 22 காலை 8:30 மணிக்கு........ *சிறார்கள்... சிறுவர் கதைகளை எப்படி எழுதலாம் என கன்னிக்கோவில் இராஜா மாமா கதைப் பயிற்சி அளிக்கிறார்* அனைவரும் இணையலாம் *வாங்க செல்லங்களா! கதை எழுதி மகிழ்ந்திடலாம்*

#லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் கதைப்பயிற்சி பெற்ற மாணவியின் சாதனை

Image
  #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் கதைப்பயிற்சி பெற்ற மாணவியின் சாதனை லாலிபாப் சிறுவர் உலகத்தில் குழந்தைகளுக்கான கதைப் பயிற்சி அளித்து வருகிறேன். அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணாக்கர்களின் கதைகள் பல இதழ்களில் வெளிவருவது மகிழ்வளிக்கிறது. கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷினி இராஜேஷ் தனது 9வது வயதில் 9 நூல்களை எழுதி, அந்நூல்களை கோவையைச் சுற்றி 9 இடங்களில் வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார். கதைகளுக்கு அவரின் சகோதரி வர்த்தினி இராஜேஷ் ஓவியங்கள் வரைந்துள்ளார். இந்த சகோதரிகளின் சாதைனயை #லாலிபாப்_சிறுவர்_உலகம் பாராட்டி மகிழ்கிறது.

Book for SALE

Image
  #BookforSALE படைப்பாளிகளுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் வணக்கம். சிறுவர் இலக்கிய நூல்களை கொண்டு சேர்க்க உங்கள் நிகழ்வுகளில் சிறுவர் இலக்கிய புத்தகங்களை பரிசளியுங்கள். அவை வளரும் இளம் குருத்துகளுக்கு நல்ல உரமாக அமையும். மகிழ்ச்சி பரவட்டும் 1. யானைக்கு உதவிய எறும்புகள் சிறுவர் சிறுகதைகள் - இடைமருதூர் கி. மஞ்சுளா 2. வாலைத் தேடிய பல்லி சிறுவர் சிறுகதைகள் - நல்லாசிரியர் விஜயலட்சுமி 3. கோலிக்குண்டு சிறுவர்கள் எழுதிய சிறுவர் பாடல்கள் - தொகுப்பாசிரியர்: ராஜேஸ்வரி ஸ்ரீதர் 4. நாய்க்குட்டி பட்டாளம் சிறுவர் சிறுகதைகள் - காரை. இரா.மேகலா 5. மந்திரப் பெட்டி சிறுவர் நாவல் எழுத்தாளர் வ.வெ. ராஜாமணி 6. கீக்கி கிளியக்கா சிறுவர் கதை பாடல் -கன்னிக்கோவில் இராஜா

#லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் #சிறுவர்_கதைப்பாடல்_நூல்கள்:

Image
  எதையும் நேரடியாகக் கற்பிப்பதைவிடக் கதை வாயிலாகவோ, பாடல் வாயிலாகேவோ கற்பிக்கும்போது குழந்தைகள் அவற்றை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். - குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் #சிறுவர்_கதைப்பாடல்_நூல்கள் : 1. கீக்கீ கிளியக்கா 2. கலகல கரடியார் 3. சிக்குபுக்கு ரயில்பூச்சி 4. குக்கூ குயிலக்கா #நனிநன்றி : *எழுதத் தூண்டும் குழந்தைகள் *பாடல் பாடி மகிழ்விக்கும் Anbudan Ananthi *மக்கள் தொலைக்காட்சி மற்றும் #நீங்கள்

நூற்றாண்டு வெளியீடுகள்

Image
  #நூற்றாண்டு_வெளியீடுகள் #Centennial_celebration தமிழ்நாட்டில் குழந்தைக் கவிஞர் என்றாலே #அழ_வள்ளியப்பா அவர்கள்தான் குறிக்கும். அவர்களின் நூற்றாண்டு (7.11.1922 - 7.11.2021) தொடக்கம் பெருமகிழ்வை தருகிறது. குழந்தைக்கவிஞர் பணிச்செல்வர் பி.வெங்கட்ராமன் ஐயாவிடம் இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தபோது தோன்றிய யோசனையை #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் உள்ள குழந்தைகள் ஒத்துழைப்போடு செயல்படுத்தி இருக்கிறோம். அழ.வள்ளியப்பா அவர்களின் பாடலை குழந்தைகள் பாடி, அதைக் காணொளியாக மாற்றி, அதனை QR codeஆக நூலில் பதிவு செய்து லாலிபாப் வெளியீடாக வெளியிடுகிறோம். இந்நூலுக்கு பெரும் பங்காற்றி இணைந்து தொகுத்துள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் #நெல்லைஅன்புடன்ஆனந்தி அவர்கள். ஏற்கனவே #நிவேதிதா_பதிப்பகம் மூலம் தம்பி உமையவன் Umayavan Ramasamy அழ.வள்ளியப்பா அவர்களின் 100 பாடல்களை #தேன்கூடு என்ற பெயரில் தொகுத்துள்ளார். "அழ.வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டில் அவர் குறித்த நூல்கள் வருவது என் குருவுக்கு செய்கிற மிகப் பெரிய மரியாதை" என் மூத்த தமிழறிஞர் திரு. பி.வெங்கட்ராமன் அவர்கள் கூறியிருப்பது பெரு மகிழ்வளிக்கிற