Posts

Showing posts from 2023

Dinamalar book review

Image
 தான் எழுதிய பல கதைகளில் இருந்து வெறும் ஏழு கதைகளை எடுத்து *லட்சத்தில் ஒருத்தி* என்ற பெயரில் சிறுகதை நூலாக்க முடிந்தார் எழுத்தாளர் *செம்மை உமா* அவர்கள்  *நூலேணி பதிப்பகம்* பதிப்பித்த இந்த நூல் இன்று *தினமலர்* இதழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. *எழுத்தாளரின் முதல் நூலை வாங்கி பாராட்டுவோம். அதன்மூலம் மகிழ்ச்சியைப் பரப்புவோம்.* நூல் விலை ₹130 + அஞ்சல் தொகை ₹20 *மொத்தம் ₹150/- செலுத்துங்கள். சிறந்த சிறுகதை நூல் இல்லம் தேடி வரும்*

Lollipop

Image
லாலிபாப் சிறுவர் உலகத்தை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 450 குழந்தைகளை ஒருங்கிணைத்து தினமும் அவர்களுக்கான ஏதாவது ஒரு செயலாக்கத்தை/பயிற்சியைக் கொடுத்து வருகிறார் #சிறுவர்_இலக்கியச்_செம்மல் #கன்னிக்கோவில்_இராஜா அவர்கள். ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், எதாவது கைவினைப் பொருட்கள் செய்தல் இப்படித் தொடர்ந்து குழந்தைகளோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் முதலில் பதிவு செய்து கொள்கிறேன். தான் மட்டும் உயராமல், தனக்கென மட்டும் என்று யோசிக்காமல் இளைய தலைமுறையினருக்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு,  அதையே தனது இலக்காக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களோடு லாலிபாப் சிறுவர் உலகத்தில் இணைந்து பயணிப்பது பெருமகிழ்ச்சி.  இன்றைய லாலிபாப் சிறுவர் உலகத்தின்  குழந்தைகளுக்கான ஒரு பயிற்சியாக கொடுக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சியை வரைக என்ற வகையில் #ஹரீஷ் என்ற குழந்தை கன்னிக்கோவில் இராஜா அவர்களையும், வண்ணத்துப்பூச்சியையும் இணைத்து அற்புதமாக ஓவியம் வரைந்து அ

Government School Storytelling

Image
  இனிதான அழைப்பு 🌾🌻🌾 இசை நுகரும் என் செவிகளுக்கு இனிதானதொரு அழைப்பு...  கவிஞர் இளம்பிறையின் அழைப்பு.  "ராஜா எங்க பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு 👦👧 கதை சொல்லுங்க" என்றார். நேரம் குறைவாக இருந்தபோதும்  மனம் நிறைவாய் இருந்ததை.. குழந்தைகளோடு இருந்தபோது உணர்ந்தேன். குழந்தைகள் "இன்னும் கொஞ்சநேரம் இருக்கச் சொன்னார்கள்"  மனதை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு உடல்கூடோடு அலுவலகம் வந்துவிட்டேன். வாய்பளித்த தோழிக்கும் மனம் மகிழ்வித்த குழந்தைகளுக்கும் பெருநன்றி. 🐦 நாள்: 16:10:2018

Mithravin kaaththadi

Image
 #நூல்அறிமுகம் நூல்: மித்ராவின் காத்தாடி நூலாசிரியர்: பிச்சிப்பூ (எ) சங்கீதா பிரபு வகை : சிறார் கதைகள் வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை 9841236965 விலை ரூ.100/- மட்டுமே இந்தத் தொகுப்பில் இருக்கும் 10 சிறுகதைகளும், குழந்தைகளை அள்ளியெடுத்து அக்கறையாய்க் கொஞ்சுகின்றன. அவர்களுக்குள் அன்பைச் சுரந்து அறிவை வருடுகின்றன. வாழ்வின் இயல்பை அவர்களுக்குப் புதுவிதமாய்ப் போதிக்கின்றன. அவர்களின் உலகை அவர்களுக்கு அடையாளம் காட்டுகின்றன. வாழ்வின் மீதான அவர்களின் பார்வையை நேர்த்தி ஆக்குகின்றன. வேறென்ன வேண்டும்? குழந்தைகளின் வாழ்வைச் சிக்கலில்லாமல் ஆக்க இவரது எழுத்துக்கள் மகத்தான மருத்துவம் செய்கின்றன. 📚🛒நூல் தேவைக்கு:  CALL📞/WHATSAPP : 9841236965

Tamil America TV

 தமிழ் அமெரிக்க தொலைக்காட்சியில் லாலிபாப் சிறுவர்களின் பாட்டும் கதையும் https://www.youtube.com/live/dlq8i57UrJU?si=By9WcC0vd7bjKPRH குழந்தைகளின் தனித்திறமையை ஊக்குவிப்பதற்காக கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட லாலிபாப் சிறுவர் உலகம் இன்றளவும் சிறப்பாக குழந்தைகளின் தனித்திறமையை ஊக்குவித்து வருகிறது. இதற்கு முதுகெலும்பாய் இருக்கிற கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களுக்கும்  பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கதை சொல்லி தேவதைகளுக்கும்  லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக பாராட்டுகள் இந்த காணொளி அண்மையில் தமிழ் அமெரிக்கா டிவியில் ஒளிபரப்பான பாட்டும் கதையும் நிகழ்வு இந்த நேரத்தில் தமிழ் அமெரிக்கா டிவி திரு ஆஸ்டின் அவர்களுக்கும் அவரிடம் குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி இதைக் கண்டு தங்களின் கருத்துகளை தாருங்கள்

Lollipop books 03

Image
 

Lollipop books 02

Image
 

Lollipop books

Image
 

Lollipop books 01

Image
 அமெரிக்காவில் வசிப்பவர் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் ஏற்கனவே கவிதை கட்டுரை தன் முனைக் கவிதைகள் எனப் பல நூல்களை எழுதி இருப்பவர். சென்ற ஆண்டு "வான் மழையே வா" என்ற பெயரில் திருக்குறளின் அறத்துப்பால் குறள்களை மையப்படுத்தி சிறார் பாடலை எழுதி சிறுவர் உலகத்தில் நுழைந்தவர். இந்த ஆண்டு முதல் முறையாக நம் லாலிபாப் சிறுவர் உலகத்திற்கு "இசைப்பட வாழ்வோம் வா" என்ற பெயரில் திருக்குறள் கருத்துகளை சிறார் பாடலாக எழுதி இருக்கிறார்‌  நவம்பர் 25ஆம் நாள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய பல்கலைக்கழகத்தில் நூல்கள் வெளியீடு வைத்திருக்கிறார்.  அவருக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக இனிய நல்வாழ்த்துகள்

Thilolkudi Magazine

Image
 #தொல்குடி_மின்னிதழ் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பட்டைய படிப்பு சேர்ந்து ஆறு மாதம் ஆகிவிட்டது  𑀢𑀫𑀺𑀵𑀺 (தமிழி) வட்டெழுத்து, கிரந்தம் என முந்தைய தமிழைப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிற வேளையில்  என்னுள் தூங்கிக் கொண்டிருந்த இதழாளன் விழித்துக் கொள்ள உருவானதுதான் #தொல்குடி மின் இதழ். ஆகஸ்ட் முதல் மாதம் தோறும் நூலேணி - புத்தக வீதி Book Street Kannikovil Raja நூலேணி பதிப்பகம்  திப்பகம்

New Book

Image
 #நூல்அறிமுகம்  நூல்: #நாட்டுப்புற_இரங்கற்பா (நாட்டுப்புறக் கல்லறையில் எழுதப்பட்ட கையறுநிலை) மொழிபெயர்ப்பு : பேராசிரியர் #இராம. #குருநாதன் பதிப்பகம்: நூலேணி பதிப்பகம்  சென்னை. 📞98412 36965 ₹100/-  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, கவிதைகளுக்குள் நுழைந்து செல்லும் போது, பேராசிரியரின் ஆங்கில ஞானத்தையும், தமிழ் அறிவையும் அறிய முடியும். மொழிபெயர்ப்பாளர் எந்தப் படைப்பாளிக்கும் துரோகம் செய்யக்கூடாது என்னும் எண்ணத்தில் ஊறிப்போய் இருப்பவர் ஒரு சிலரே. உமார்கய்யாம் பாடல்களைக் கவிமணி தமிழாக்கம் செய்திருக்கிறார். படித்துப் பார்க்கும் போதுதான் தெரியும்... உமார்கய்யாம்மைத் தேடி அலைந்து தோற்றுப் போக வேண்டியிருக்கும். ஆனால் இங்கே பேராசிரியர் இராம. குருநாதன் மொழியாக்கம்தான் செய்கிறோம் என்ற நினைப்பிலேயேயும், மூல ஆசிரியருக்கு எவ்வித துரோகமும் செய்யக்கூடாது என்ற உறுதியுடனும் செயல்பட்டதாலே, நமக்கு தாமஸ் கிரே பாமரனுக்கும் புரியும் தமிழ் மொழியில் கிடைத்திருக்கிறார். - முனைவர் பேராசிரியர் #ராஜ்ஜா  மேனாள் ஆங்கிலப் பேராசிரியர்  புதுவை அரசு கல் லூரி, புதுச்சேரி

மாடிப் பேருந்து

Image
 ஜனவரி 1997, மாடிப்பேருந்து A 18 என்ற வழிதடத்தில் பிராட்வேக்கும் வன்டலூருக்கும் இடையே இயக்கப்பட்டது. செப்டம்பர் 2008 - இல் மாடிப்பேருந்து, நெரிசலான போக்குவரத்து சாலைகளில் ஓட்டுவது சிக்கலானது என்ற காரணத்தை மேற்கோள் காட்டி, பேருந்து சேவை கைவிடப்பட்டது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் மாடிப்பேருந்து இயக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து சென்னையில் மாடிப்பேருந்து அண்ணா சாலையிலும் மற்றொன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அருகாமையில் உள்ள விமான ஓடுதளம் முடியும் இடத்திற்கு மிக சமீபத்தில் உள்ள சாலையில் இருந்து அசோக் பில்லர் வரை சிறிது காலம் இயக்கப்பட்டது. மாடிப்பேருந்து இயக்கும் பொழுது சாலையின் குறுக்கே எந்த விதமான மின்சாரக் கம்பி அல்லது தொலை தொடர்பு கம்பிகள் அல்லது வேறு வகையில் எந்தவிதமான குறுக்கீடு இருக்க கூடாது என்ற காரணத்தால் இரண்டே இரண்டு வழித்தடத்தில் மட்டும், தேர்வு செய்யப்பட்டு, மாடிப்பேருந்துகள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது...... நன்றி முகநூல் 

புத்தகத் தூதுவர்

Image
 *கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை (குறள்:789)* நம் வாழ்நாளில் நாம் பலருக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கிறோம்; நமக்குப் பலர் பரிசளிக்கிறார்கள். வாசிக்கிறோம்; வரிசையாக அடுக்கி வைக்கிறோம். ஒரு சிலர் வாசித்த நூல்களை வாசிப்போருக்குப் பரிசளிக்கிறார்கள். பெங்களூருவில் வசிக்கும் *பேராசிரியர் கதைசொல்லி தாமரைச்செல்வி* அவர்களுக்கு, *லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பித்த நூல்களையும், அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களின் நூல்களையும் பரிசாக அனுப்பியிருந்தோம்.* அவற்றைப் படித்து *Tale Tribe* நிகழ்வின் மூலம் கதைகளாக, நூல் விமர்சனமாகச் செய்து வருவதோடு தான் செல்லும் பள்ளி, கல்லூரிக்கு பரிசாக வழங்கியும் வருகிறார். அண்மையில் *கோயம்புத்தூர் CS Academy பள்ளிக்கு, கன்னிக்கோவில் இராஜா, கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ* மற்றும் சில படைப்பாளர்களின் நூல்களைக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். அவரை *லாலிபாப் சிறுவர் உலகம்* மற்றும் "நூலேணி புத்தக வீதி* வாழ்த்தி வணங்குகிறது.

Book seeds

Image
 *புத்தக விதை* எங்கெங்கு குழந்தைகள் படிக்கின்றனரோ அங்கெல்லாம் புத்தகங்கள் விதையைத் தருகின்றன. அண்மையில் குடும்பத்தினரோடு தமிழ்நாட்டுக்கு வந்த மலேசியாவை சேர்ந்த நல்லாசிரியரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். நம்மில் பலருக்குச் சந்திப்பு என்பது உற்சாகம்; எனக்கு நல்லுரம். இந்தச் சந்திப்பும் அப்படித்தான். இல்லத்துக்கு வந்திருந்தவர்களின் கரத்தில் புத்தகக் குவியலை அளித்தேன் அதைப் பிறந்த குழந்தையைப் பெறும் லாவகத்தோடு பெற்றுக் கொண்டனர். *திருமதி.புனிதா - திரு. பிரகாஷ்* இணையர் கொசுராக ஐந்தாம் ஆண்டுப் பயிலும் மாணவி *திவ்யஸ்ரீ பிரகாஷ்* இணைந்திருந்தது பெருமகிழ்ச்சி. தமிழ்நாட்டில் இருந்து விமானம் வழியாக மலேசியா சென்ற புத்தகங்கள் மலேசிய தமிழ் குழந்தைகளின் கைகளில் தவழ்ந்தது ஒளிப்படங்களின் வழியே உரமேற்றியது. கதைகள் என்ன செய்யும்? என்கிற வினாக்களுக்கு விடையே குழந்தைகளின் வாசிப்பு; கற்பனை சக்தி; கேள்விகளில் துணிவு; தன்னம்பிக்கை; தைரியம் என வாசிக்க வாசிக்கப் புத்தகங்கள் அத்தனை விதைகளையும் அவர்களின் மனதில் பரப்பும் என்பது நதியின் ஓட்டம் தானே. இந்த விதைகளை மாணவர் மனங்களில் பரப்பிய *நல்லாசிரியர் புனிதா சுப்ரமண

வாங்க தெரிஞ்சுக்கலாம்-03

Image
வணக்கம் நண்பர்களே ஒரு படைப்பாளியின் படைப்பு வெளிவந்தவுடன் அது குறித்த அறிமுகம் விமர்சனம் எனத் தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் அது உயிர்ப்புடன் இருக்கும் அந்த வகையில் அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் #நெல்லை #அன்புடன்ஆனந்தி மற்றும் பெங்களூருவில் வசிக்கும் பேராசிரியர் #தாமரைச்செல்வி இணைந்து #வாங்க #தெரிஞ்சுக்கலாம் என்ற தலைப்பில் மாதம் தோறும் #கன்னிக்கோவில்இராஜா எழுதிய சிறார் புத்தகங்களை அலச தொடங்கி இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சி குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை  பாகம்:03 #காண்டாமிருத்தின்_பேபிசோப்பு சிறார் கதைகள் குறித்து தெரிஞ்சுக்கலாம் வாங் காண்க: 01 #பிடிங்க_பிடிங்க_மயில்முட்டையைப் #பிடிங் https://www.youtube.com/live/40K77LGfJrU?feature=sha 02 #பட்டாம்பூச்சி_தேவதை https://www.youtube.com/live/DcEIg--eNz8?feature=sha Anbudan Ananth Thamarai Selvi Elamaran Perumal

Malaysia -India, Tamilnadu

Image
 *அன்புஈனும் ஆர்வம் உடைமை*milnadu *இந்தியா, தமிழ்நாடு என்றாலே அது கன்னிக்கோவில் இராஜா மாமாதான்* சென்ற வாரம் மலேசிய ஆசிரியை *திருமதி. புனிதா சுப்பிரமணியம் (தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்).* ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். மலேசிய பள்ளியில் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்வுக்காக தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்திருந்தார்களாம்.  *"நம்முடன் கலந்துரையாடல் செய்யப் போவது கன்னிக்கோவில் இராஜா மாமாவா?"* என்று புனிதா ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்டார்களாம். "இப்போது கலந்துக்க போவது மாமா இல்லை; ஒரு பள்ளி ஆசிரியர். மாமாவை இன்னொரு நாள் அழைக்கலாம்" என்று கூறியிருக்கிறார். *"ஓ. சரி"* என்று சொல்லி இருக்கிறார்கள் மாணவர்கள். "அண்ணா! எல்லோரும் உங்களை பார்க்க ஆவலாக இருக்காங்க; மாணவர்கள் மத்தியில் *இந்தியா, தமிழ்நாடு என்றாலே அது கன்னிக்கோவில் இராஜா மாமா என்பதாகவே பதிவாகிவிட்டது*" என்றார் புனிதா ஆசிரியை. இதைக் கேட்டதும் வள்ளுவப் பெருந்தகை எழுதிய *உலகப் பொதுமறை திருக்குறளின் அதிகாரம்-8 அன்புடைமை* தலைப்பில் அமைந்த திருக்குறள் ஒவ்வொன்றாக என் மனப்

#ChennaiBookFair2023

Image
 #ChennaiBookFair2023  நேற்று நண்பர் இயக்குனர் கவிஞர் #ராசிஅழகப்பன் அவர்களின் #வான்உயர்ந்தஆதுரசாலை நூல் வெளியீட்டு விழாவிற்காக #காக்கைக்கூடு (அரங்கு எண்: 589) சென்றிருந்தேன் அங்கு புன்னகை பூ ஒன்று தனது தந்தையோடு வந்திருந்து. தனது கையில் 21ஸ்டார் போட்டு இருந்ததை ஒவ்வொன்றாக எண்ணினாள் அந்த மகிழ்வில் நானும் ஒரு ஸ்டாரை போட்டு 22 என்றேன். சற்று நேரத்தில் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து, அப்பாவை பார்த்து "வேண்டும்" என்றாள் "சரி" என்றார் அப்பா. "நான்தான் எழுதினேன்" என்றேன் என்னை ஒரு பார்வை பார்த்தாள் தீயா வாழ்த்தி எழுதி கையொப்பமிடச் சொன்னார் அப்பா கையொப்பம் போட்டு தந்தேன். திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் தியா. பில் போடும்போது அருகில் வந்த #பாவையர்மலர் இதழின் ஆசிரியர் #வான்மதி தன் பங்கிற்கு ஒரு ஸ்டாரை போட்டு 23 ஸ்டார் என்றார். மகிழ்ந்தாள் தியா ஒரு இளம் வாசகியை சந்தித்த மகிழ்வில் விடைபெற்றேன்

Drama day

Image
*நல்லா_நடிங்க_பாஸ்* *உலக_நாடக_நாள்* அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வின் விடுமுறையில் அத்தை ஊருக்கு செல்வவேன். அங்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் நாடகம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஏற்கனவே வழக்கத்தில் இருந்த நாடகத்தை எடுத்து அதில் கொஞ்சம் என் கற்பனையை இணைத்து ஊர் நண்பர்களோடு இணைந்து நடித்துக் காட்டுவேன். குழுமியிருந்த மக்களே எங்களின் பெருவாசகர்கள். பள்ளியில் இரண்டு முறை நாடகத்தில் நடித்த அனுபவம் உண்டு. இலக்கியத்திற்கு வந்த பிறகு (ஆரம்பத்தில்) சிறார் நூல்களை வெளியிடும் விழாவில் குழந்தைகளை வைத்து நாடகத்தை நடத்துவேன் .. அவ்வாறு ஒரு முறை அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு நான் எழுதிய சிறார் கதையான *கஜாவின் தாகம்* என்பதை நாடகமாக நடத்தினேன். அதில் என் குழந்தைகள் இருவரும் யானைகளாக நடித்தார்கள். அந்த நாடகத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியவர் *திரைப்பட இயக்குனர் எஸ்_பி_முத்துராமன்* அவர்கள். (உனக்கு இயக்குனராகத் தகுதி உண்டு என்று வாழ்த்தினார்) அதில் ஒரு பெண் யானைக்குக் குரல் கொடுத்தவர் *கவிஞர் செல்லம் பாலா அவர்களின் மனைவி.* சன் தொலைக்காட்சியில் ஒரு நாடத்திற்கு அனைத்து தேர்விலும் வெற்றி பெ

புனையினும் புல்என்னும் நட்பு

Image
 *புனையினும் புல்என்னும் நட்பு* கொரோனா காலத்தில் சங்க இலக்கிய ஆய்வு மன்றம் நடாத்திய நிகழ்வில் சிறார் *எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ* புத்தகத்தை ஒருவர் ஆய்வுரை செய்தார். அந்த ஆய்வுரை என் மனதுக்கு நெருக்கமானது. அதனால் அந்த அமைப்பில் தொடர்பு கொண்டு அவரின் எண் வாங்கிக் குழந்தை இலக்கியத்தின் சார்பில் அவருக்கு நன்றி சொன்னேன். அதன் பிறகான காலகட்டத்தில் தொடர்ந்து குழந்தை இலக்கியம் நூல்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அன்றிலிருந்து இன்று வரை *லாலிபாப் சிறார் உலகத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இயங்கி வருகிறார்.* பெங்களூருவில் 'Tale Tribe' அமைப்பின் மூலம் தன் அண்ணி திருமதி. ஜெயந்தி அவர்களோடு இணைந்து சிறாருக்குத் தமிழ் & ஆங்கிலக் கதைகளைச் சொல்லி வருவதோடு சிறந்த நூல்களையும் அறிமுகப்படுத்துகிறார். என் பல கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி வருகிறார். அவர்தான் குழந்தைகள விரும்பும் *கதைசொல்லி தாமரைச்செல்வி* அவர்கள். இன்று சென்னை வந்தவரை, நான் அதிகம் விரும்பும் *நாகேஸ்வரராவ் பூங்காவில்* சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. (இந்தப் பூங்காவில் தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அமர்ந்து பல கவிதைகள

Story books

Image
சிறார் கதை நூல்கள்: 28 சிறார் பாடல்கள்: 5 சிறார் கதைப்பாடல்கள்: 6 கவிதைகள்: 7 கட்டுரை: 1 தொகுத்த நூல்கள்: 46

#ChennaiBookFair2023

Image
 #ChennaiBookFair2023   நடந்த வலியின் வேர்களை, கால்களில் ஏந்தி கொண்டு புத்தகக் காட்சியை விட்டு வெளியேறினேன். கருப்பு குதிரை என நின்று இருந்த என் வாகனம்,  தூசி படிந்து கேட்பாரற்று படுத்து கிடக்கும் மானிடனைப் போல இருந்தது. திறவுகோல் திறந்து பழைய துணி ஒன்றை எழுத்து துடைத்த பின் நத்தையைப் போல முன் சென்ற வண்டிகளின் பின் சென்று கொண்டிருந்தேன். "தம்பி! தம்பி!" என்று ஒரு அழைப்பு குரல். வலது பக்கம் திரும்பிப் பார்த்தால் ஔவை மூதாட்டியையொத்த ஒரு ஒளவை நின்று இருந்தார் "என்ன... அங்கனக்குள்ள கொண்டு போய் விட்டுடுறீங்களா?" என அனுமதி கேட்டார். "வாங்கம்மா வாங்க" என்றேன். ஏறி அமர்ந்ததும் "47ஏ பஸ் ஸ்டாண்ட்ல விட்டுடுங்க. நீங்க அந்த பக்கம் தானே போறீங்க? என்றார். "இல்லம்மா நான் மயிலாப்பூர் போறேன். ஆனா கொண்டு போய் விடறேன்"  என்றேன்.  "ஆமாம் தம்பி. உங்கள் பெயர் என்ன? "உங்களுக்கு அறிமுகமான கன்னிக்கோவில் ராஜாதான்" என்றேன். "அட! நீங்களா! அதானே வாஞ்சையோடு கூப்பிடும் போது நமக்கு தெரிஞ்சவங்கதான்னு  நினைச்சேன். அடையாளம் தெரியல தம்பி" என்றார். பேருந