Posts

Showing posts from March, 2022

Arivoli Readers Club

Image
  உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங் கறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். (நாலடியார்: 38) மிகமிகச் சிறியது ஆலின் விதை. அது மண்ணில் விழுந்து, முளைத்துப் பெரிய மரமாகிப் பலநூறு பேர் வந்து தங்க இடமும் நிழலும் தருகிறது. அது போலத்தான் செய்யப்படுகிற நல்லறத்தின் அளவு சிறிதாக இருக்கலாம். ஆனால், அது தக்காருக்குத் தக்க சமயத்தில் செய்யப் பட்டதாயிருப்பின் அதன் பயன் வானத்தைவிட விரிந்தது, உயர்ந்தது. *** ஓலைச்சுவடி Books உடன் இணைந்து அறிவொளி வாசிப்புக் குழு நடத்திய சிறார்களுக்கான கதை சொல்லல் போட்டியில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசாக புத்தங்கள் வழங்கியது. லாலிபாப் சிறுவர் உலகம் வெளியிட்ட நூல்களை வாங்கி பரிசளித்து இருப்பதை பாராட்டி வரவேற்கிறோம்.

Dinamani Book Review தினமணி நூல் புதிது

Image
  தினமணி நூல் புதிது  ஜீராவும் பஜ்ஜியும் ( சிறுவர் கதைகள் ) -  ஹரிவர்ஷ்னி ராஜேஷ்   பக் .: 96 | விலை : ரூ .100  வெளியீடு :  லாலிபாப் சிறுவர் உலகம் , எண் .28/11, கன்னிக்கோவில் பள்ளம் , அபிராமபுரம் முதல் தெரு , சென்னை 600 018.  பேச : 98412 36965  ஒன்பது வயதான ஹரிவர்ஷ்னியின் எண்ணத்திலும். எழுத்திலும் உருவான ஒன்பது கதைகள்தான் இந்நூலில் உள்ளன. நகைச்சுவை, கற்பனை, துப்பறிதல் என்று கதைக்கரு அமைந்துள்ளன. இந்தக் கதைகளுக்கு அற்புதமாக ஓவியம் வரைந்திருக்கிறார் பு5 வயதான வர்த்தினி ராஜேஷ். தாலியாப்பூர் நாட்டில் வாழ்ந்த மீம், திக்கி, தேஜு, டாலியா ஆகிய நான்கு நண்பர்களும் குட்டி இளவரசி பிந்துமதியுடன் நட்புடன் இருக்க நினைக்க, அவள் அதை ஏற்க மறுக்க, அவளது போக்கை மாற்றி அவளை நட்பாக்கிக் கொள்வதற்கு உளுந்துவடையைப் பயன்படுத்துவது நல்ல நகைச் கவை. இனி உளுந்து வடையைப் பார்த்தால் நீங்களும் விடமாட்டீர்கள். கோட்டு கொட்டுலு என்ற நண்பர்கள் புதையலைத் தேடிப் போக, அந்தப் புதையல் எது என்று தெரிய வரும்போது அவர்களுக்கு மட்டுமல்ல, படிப்பவர்களுக்கும் வியப்பு கலந்த அதிர்ச்சி உண்டாகும். காய்கறி வாங்கப் போன ஜீராவும் பஜ்ஜி

Selfie with Kannikovil Raja Uncle's books

Image
கன்னிக்கோவில் இராஜா மாமாவின் புத்தங்களோடு ஒரு ஷெல்பி  

Dinamani Siruvar Mani 12.03.2022 Lollipop

Image
தி னமணி - சிறுவர்மணி   நாள்:12.03.2022 குழந்தைகள் விரும்புவது போன்ற குழந்தை பாடல்கள் எழுதுவதில் கைதேர்ந்தவர் இந்த நூலாசிரியர். எந்த ஒரு செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையாரை நினைக்கணும், அவர் தாளினையே வணங்கணும் என்று பிள்ளையாருக்கு முதல் வணக்கம் கூறி முதல் பாடலை தொடங்கியுள்ளார். அம்மாவின் அன்பு, பாசம், உழைப்பின் மேன்மை, சேமிப்பின் அவசியம், நட்பின் இலக்கணம், ஒற்றுமையின் அவசியம், உண்மையான பக்தி, பூனைக்குட்டி, பள்ளிக்கூடம், மழை, ஏப்ரல் ஃபூல், சேவல், சைக்கிள், நடைவண்டி, வானவில் எனப் பல பாடல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்றார்போல எளிய நடையில் பாடல்கள் அமைந்துள்ளன.

நூல் போட்டி

 *தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2021*    2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2020, 2021ஆம் ஆண்டுகளில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூல்/ குறுந்தகடு இரண்டு பிரதிகள் *2022 ஏப்ரல் 15* ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும்.    அனுப்ப வேண்டிய முகவரி: பொதுச்செயலாளர்,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,  57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)  மதுரை- 625001  தொலைபேசி: 0452-2341669    பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் “தமுஎகச விருது”,  *சான்றிதழ், தொகை ரூ.10,000/-* ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும்.    விருதுகள்    1. தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல்  2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது: நாவல்  3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு  4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: கலை இலக்கிய விமர்சன நூல்  5. வெம்பாக்

சிக்கு புக்கு ரயில் பூச்சி’, ‘கீக்கீ கிளியக்கா

Image
நவீன முறையில் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து பாடல் கேட்கும் வாய்ப்பும் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜாவின் ‘சிக்கு புக்கு ரயில் பூச்சி’, ‘கீக்கீ கிளியக்கா’ இரண்டு நூல்களும் படித்தேன். இன்னும் கேட்கவில்லை. இரண்டுமே அருமையாக உள்ளன. உப்புவித்த பாப்பாவின் அப்பா நிலைமை, ஐயோ பாவம்! மாமரத்து ஊஞ்சல் சுவையான பாடல். மழை நீரைச் சேமிக்கலாம் - காட்சிப்படுத்தும் அழகிய பாடல் .‘பூனை சவாரி’ கற்பனை செய்து பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. ‘வீசி மகிழலாம்’ பாடலில் விதைப்பந்து பற்றிய செய்தி அருமை. முயலுக்காக மேகம் இறங்கி வந்து தாகம் தீர்த்த கற்பனையும் சிறப்பு.  குழந்தை ஏறிய குதிரை - குழந்தை உளவியலைப் படம் பிடிக்கிறது. கொசுவை அடித்து அடிபட்ட அனுபவம் அழகிய பாடலானது. நிழலுக்கு பயந்த புலி கற்பனை அருமை. இரண்டு நூல்களும் வண்ண அட்டைகளுடன், அழகான படங்கள் மற்றும் ஓவியங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளன. நவீன முறையில் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து பாடல் கேட்கும் வாய்ப்பும் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வாழ்த்துகள்.  அன்புடன், தேவி நாச்சியப்பன்