Posts

Showing posts from August, 2020

வனதேவதையின் பச்சைத்தவளை சிறுவர் கதைகள் நூல் குறித்து

Image
  #செய்ந்நன்றியறிதல் வாசகசாலை பதிப்பித்த #வனதேவதையின் #பச்சைத்தவளை சிறுவர் கதைகள் நூல் குறித்து Ramya Storyteller பார்வை ========= மனிதர்களின் பேராசையும் பெரும் தேவையும் இயற்கையையும் அதை மட்டுமே நம்பியிருக்கும் பல உயிர்களையும் கேள்விக்குறியாகி வருகிறது இந்த நேரத்தில் நம்மைச் சுற்றியிருக்கும் உயிர்களை பாதுகாத்திட கரம் கொடுப்பது மிக மிக அவசியம். அதற்கு முதலில் அந்த உயிர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றின் தேவை இந்த பூமிக்கு எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் ஒவ்வொன்றும் அதைத்தான் நம்மிடம் கதைகள் வழியே தெரிவிக்கிறது. ஒவ்வொன்றிலும் அவற்றைப் பற்றி சொல்லப்படும் தகவல்கள் வெறும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமல்ல அவற்றை எப்படி பாதுகாக்கலாம் என்பதை உணரத்தான். அந்த வகையில் மிக எளிமையான நடையில் இயற்கையையும் உயிர்களையும் நமக்கு நெருக்கமாக அழைத்து வருகிறார் நண்பர் #கன்னிக்கோவில்ராஜா (அணிந்துரையில் #கே_யுவராஜன் குழந்தைகள் எழுத்தாளர்) #கதைகள் : 1. அப்பாவின் பாசத்துக்கு ஏங்கும் சிங்கக் குட்டிகள் 2. கேள்விகளால் குழம்பும் ஒட்டகச்சிவிங்கி 3.

BookFriend சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 117

Image
  #தனிமரம்_தோப்பானது ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு நாள்தோறும் குழந்தை செயல்பாட்டாளர்களை, கதைசொல்லிகளை, ஆசிரியர்களை, அறிவியல் அறிஞர்களை அழைத்து அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான செயல்களை தருகிறது புத்தகநண்பன் நிகழ்வு. 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக செல்லும் இந்நிகழ்வின் அடுத்தகட்டமாக குழந்தைகளே கதை எழுத பயிற்சி அளிக்கிறோம். அவசியம் வாருங்கள். இந்நிகழ்வை அறிமுகப்படுத்திய கதைசொல்லி Saritha Jo Storyteller அவர்களுக்கும், சிறப்பாக செயல்படும் Manathunai Nathan , Shankar Sankar Dharma , Logu ஆகியோருக்கு மகிழ்நன்றி. ***** சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 117 இன்று 22.08.2020. மாலை 5.20 மணிக்கு zoom meeting I'd: 3392971274 Password: 887766 மேலும் https://us04web.zoom.us/j/3392971274?pwd=cTU1TWlaTGtYV0lER2d1QjV2N2J3QT09 link ஐ பயன்படுத்தியும் இணையலாம். மேலும் Facebook live இல் காண https://www.facebook.com/manathunai.nathan.56/ என்ற link ஐ பயன்படுத்தவும்.

Peacock Story

Image
  #கதை_குறித்து_கருத்து #வாசித்ததில்_செவிக்குள்_தேன் =============================================== இங்கே உள்ளது சிறுவர் இலக்கிய எழுத்தாளர் திரு. கன்னிக்கோவில் ராஜா Kannikovil Raja அவர்களின் முகநூல் பதிவு, அதனை ஷேர் செய்ய நினைத்தேன், ஏனோ முடியவில்லை. திரு. கன்னிக்கோவில் இராஜா Kannikovil Raja அவர்கள் பொறுத்தருள்க . ============ கருத்தாளர்: திருமதி #பிரவீணா Praveena Ramarahthinam சிறுவர் இலக்கிய எழுத்தாளர் திரு.கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய #ஓடும்முட்டை_துரத்தும்_மயில் அண்மையில் தி இந்து தமிழ் திசை - மாயாபஜாரில் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். என்ன ஒரு அழகான கதை! மயிலின் முட்டை ஓடுவதும் அதனை பிடிக்க காட்டின் "குடிமக்கள்" அனைவரும் மயிலுக்கு உதவ வருவதும், என்னதான் பிறர் உதவினாலும் நமது தேவையை நம்மால் மட்டுமே நிறைவேற்றிக்.கொள்ள முடியும் என்னும் உண்மையையும், உணர்த்தும் அழகான கதை. முன்பும்,ஒரு நிகழ்வில், இக்கதையை கன்னிக்கோவில் இராஜா அவர்கள் சொல்லக் கேட்டது உண்டு. உதவி என்பது என்ன? நாம் செய்ய வேண்டியவற்றை செய்யும் வழியை நமக்கு உரைப்பது. நமக்காக பிறர் பணியை செய்வது அல்ல எ

எனக்கான_கருப்பொருள்கள்

Image
  எனக்கான_கருப்பொருள்கள் குழந்தைகளுக்காக கதைகள் எழுதும்போது இருக்கிற மனநிலையைவிட அவர்கள் அதைப் படித்தோ... கேட்டோ உணர்கிற மகிழ்வின் நிமிடம் தான் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகின்ற நிமிடங்கள். "மாமா" என்றும் "அங்கிள்" என்றும் அழைக்கும் மழலையில் வாய்மொழியில் இருந்து கதையின் அறிமுகமும் விமர்சனமும் வந்து விழும் அழகு.... வாழை இலையில் தேனில் ஊறிய பலாசுளைப் போலவோ, பனையோலையில் அள்ளி வைக்கும் நுங்கைப் போலவோ இருக்கும் ‌. ஒருமுறை சுவைத்துவிட்டால் மீண்டும் சுவைக்கத் தூண்டுவதாக அமைகின்றன கதைக்கேட்கும் மழலை மொழிகள். நீங்களும் அந்த சுவையை உணர கதை கூறுங்கள். உணருங்கள். https://m.facebook.com/story.php?story_fbid=1675819759262024&id=100005020481083

seven colour elephants (Children's Story Book)

Image
 book for sale

Children's Bedtime Stories

Image
 Kids Story:

Kids Story: Kullanari Thirudakoodathu

Image
 Kids Story: Kullanari Thirudakoodathu

#thehindutamil #peacockegg #kannikovilraja

Image
  கதை : ஓடும் முட்டை ... துரத்தும் மயில் ... கன்னிக்கோவில் ராஜா கடகடவென்று உருண்டு ஓடிக்கொண்டிருந்தது ஒரு முட்டை . “ ஐயோ ... என்   முட்டை   உருண்டு ஓடுதே ... யாராவது பிடிங்களேன் ” என்று கத்திக்கொண்டே முட்டையின் பின்னால் ஓடியது மயில் . “ ஓ ... இது உன்னோட முட்டையா ? இதோ தடுத்து நிறுத்தறேன் ” என்று சொல்லிக்கொண்டே குறுக்கே நின்றது நத்தை . நத்தையை உருட்டிவிட்டுவிட்டு வேகமாக உருண்டது முட்டை . ‘ இது என்ன முட்டையா , கல்லா ? எவ்வளவு உறுதியா இருக்கு ’ என்று மனதுக்குள் நினைத்தது நத்தை . “ என் முட்டையை யாராவது காப்பாத்துங்களேன் ” என்று மீண்டும் கத்திக்கொண்டு சென்றது மயில் . உடனே எதிரில் வந்த மரவட்டைத் தன் உடலை முறுக்குபோல் சுருட்டிக் கொண்டு ,  முட்டை   முன்னால் வந்தது . முட்டையோ வந்த வேகத்தில் மரவட்டையையும் உருவிட்டுச் சென்றது . “ ஒரு முட்டையை உன்னால தடுத்து நிறுத்த முடியலையா ?” என்று கோபத்துடன் கேட்டது மயில் . “ உன் முட்டையைக் காப்பாற்ற நினைத்த எனக்கு நல்ல அடி ” என்று சொல்லிவிட்டு மீண்டும் சுருண்டுகொண்டது மரவட்டை . மீண்டும் ம