Posts

Showing posts from August, 2022

நூல் போட்டிகள்

Image
  வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் - 2022 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது  வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த ஏழு வருடங்களாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்றே..! அந்த வகையில் இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின் "முப்பெரும் விழா" மேடையில், இவ்வருடத்திற்கான 'தமிழ் இலக்கிய விருதுகள்' வழங்கப்படவுள்ளன. முந்தைய வருடங்களில் சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக எழுத்தாளர் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த 2019 முதல் சிறந்த சிறார் இலக்கியம் , சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய மூன்று புதிய பிரிவுகள் இணைக்கப்பட்டன. கூடுதலாக கடந்த ஆண்டில் இருந்து சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு விருதும் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த ஒன்பது பிரிவுகளிலும் விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு சேர்த்து ரூபாய் 5000 பரிசுத் தொகையும் வழங்கப்படும். முழுக்க தேர

ஹைக்கூ நூல் போட்டி - 2021

Image
  கன்னிமாரா வாசகர் வட்டம் , நூலேணி புத்தக வீதி நடத்தும் ஹைக்கூ நூல் போட்டி - 2021 - நூல்கள் 64 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.  - 2021ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும். - நூலின் 3 படிகள் அனுப்ப வேண்டும். - அனுப்பும் உறையின் மீது ‘ஹைக்கூ நூல் போட்டி-2021’ என்று குறிப்பிட்டு அனுப்பவும். - நூல் அனுப்ப வேண்டிய இறுதி நாள்: செப்டம்பர் 30, 2021. - முதல் பரிசு ரூ.5000 மற்றும் ஐவருக்கு சிறப்புப் பரிசாக ரூ.1000. - நடுவரின் தீர்ப்பே இறுதியானது. விசாரணைகள் ஏற்கப்படாது. - சிபாரிசுகள், தொலைபேசி தொடர்புகள் தவிர்க்கப்படுகிறது.  விழா தேதி பின்னனர் அறிவிக்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கன்னிக்கோவில் இராஜா நூலேணி புத்தக வீதி - ஹைக்கூ நூல் போட்டி  2021, எண்.28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை - 600 0ப18. cell: 98412 36965

மாபெரும் சிறுகதைப் போட்டி

Image
செய்தி அலை டிஜிட்டல் நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டி ரூபாய் 25,000 பரிசு முதல் பரிசு 7 ஆயிரம் ரூபாய்,  இரண்டாம் & மூன்றாம் பரிசு தலா 4 ஆயிரம் ரூபாய் சிறந்த கதைப் பரிசு: 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள் * இதுவரை எந்தப் போட்டிக்கும் அனுப்பாத படைப்பு என உறுதியளிக்க வேண்டும். கதையின் பேசுபொருள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். • 1000 வார்த்தைகளுக்கு மேல் அல்லது 5 பக்கங்களுக்கு மிகாமல் கதை இருக்க வேண்டும். • பிற எழுத்தாளர்களின் கதையை எடுத்துப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் நூலாக வெளியிடப்படும். நீங்கள் அனுப்பும் கதைகள் selthi alai முகநூல் பக்கத்தில் தினந்தோறும் வெளியிடப்படும். கமெண்டுகள் பெற்றால் அது கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். கதைகளை அனுப்பக் கடைசித் தேதி: செப்டம்பர் 30, 2022 கதைகளை அனுப்ப  editor@seithialai.com போட்டி முடிவுகள் அக்டோபர் 24 (தீபாவளி) அன்று வெளியிடப்படும்.

நூல் போட்டிகள்

Image
  *நூல்போட்டிகள்* *மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்தும் 150 ஆவது திங்கள் பாவரங்கத்தை முன்னிட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன* போட்டிகள் : 1.மரபுப்பா 2.துளிப்பா ( ஐக்கூ ) நகைத்துளிப்பா (சென்ரியு) உரைத்துளிப்பா (ஐபுன்) இயைபுத்துளிப்பா (லிமரைக்கூ) 3.குழந்தை இலக்கியம் (பாடல், சிறுகதை, புதினம் ( நாவல் ) விதிமுறைகள் : 1. 2021- 2022 இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் மட்டும் 2. நூலின் இரண்டு படிகள் அனுப்பப்பட வேண்டும் 3. நூலாசிரியரின் தன்குறிப்பும், ஒளிப்படமும் இணைக்கப்பட வேண்டும் 4.துளிப்பா நூல் 64 பக்கங்களுக்கும், மற்ற நூல்கள் 80 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும் 5. ஒவ்வொரு பிரிவுக்கும் சம அளவிலான 3 பரிசுகள் வழங்கப்படும் 6. ஒவ்வொரு பரிசும் தலா உரூவா 1000 பொற்கிழியுடன், விருதும் சேர்த்து வழங்கப்படும்  7. பரிசுகள் ஆகசுட் இறுதியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் 8.நடுவரின் தீர்ப்பே இறுதியானது 9. நூல்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது 10. நூல்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 20.08.2022 நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: கு.அ.தமிழ்மொழி, தலைவர், பொதுநலத் தொண்டியக்கம், அறிவாளன்

சிறுகதைப் போட்டி 2022

Image
 சிறுகதைப் போட்டி

கவிதைப் போட்டி

Image
 கவிதைப் போட்டி