Posts

Showing posts from January, 2021

Tamil Calender

 "சார் கூரியர்" என்ற குரல் கேட்டு வாசலுக்கு சென்றால் உருண்டை வடிவில் ஒன்றை தந்தார்.  "நன்றி" சொல்லி விட்டு அனுப்புநர் யார் என்று பார்த்தேன். "வசந்தா பதிப்பகம்" என்றிருந்தது. சதுரமான கூரியர்களையே கண்ட எனக்கு உருள் வடிவம் ஆர்வத்தைத் தூண்டியது. பிரித்தேன் பிரித்தேன் ரித்தேன் த்தேன் தேன் ஆம் . தேன் தான். குழந்தை இலக்கியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட "கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்களின் ஒளிப்படம் தாங்கிய "தமிழ் நாள்காட்டி" வந்திருந்தது.  சிறப்பாக ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு தமிழ் சங்கங்களை இணைந்திருப்பதும், தமிழ்ச் சான்றோர்களின் பிறந்தநாளை பதிவிட்டிருப்பதும் கூடுதல் மகிழ்வைத் தந்தது.  இயக்குனர், பதிப்பாளர், இதழாசிரியர் #முனைவர்_மோ_பாட்டழகன் அவர்களின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது. லாலிபாப் சிறுவர் உலகத்தின் சார்பில் வாழ்த்தி, பாராட்டி மகிழ்கிறேன் ‌ வாழ்க தமிழ்...
Image
  குழந்தை இலக்கிய ரத்னா #வள்ளிதாசன் (எ) ஜெ.எத்திராஜன் ஐயா மறைவு இந்தியாவிலேயே தலை சிறந்த குழந்தை எழுத்தாளர் எனப் புகழ் பெற்ற அமரர் டாக்டர் . பூவண்ணன் அவர்கள் சிறுவர் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகக் காரணமாக இருந்த மூத்த குழந்தை எழுத்தாளர் ஜெ . எத்திராஜன் 1947- ல் பள்ளி மாணவராக இருந்தபோதே சிறுவருக்காக எழுதத் தொடங்கினார் . இளம் வயதிலேயே ‘ மான்’ , ‘ கரும்பு’ ஆகிய சிறுவர் வார இதழ்களுக்குத் துணை ஆசிரியராக இருந்தவர் . சிறுவருக்காக இவர் எழுதிய கதைகளும் நாவல்களும் பல புத்தகங்களாக வெளி வந்தள்ளன . இவர் எழுதிய “ ஆவணத்தின் கதை” என்னும் நூல் 1995- ல் தமிழ்நாடு அரசின் குழந்தை இலக்கியப் பரிசினைப் பெற்றது . ஏற்கனவே ‘ பண்டித ரத்னா’ என்னும் பட்டம் பெற்ற இவர், ‘ குழந்தை இலக்கிய மாமணி’ (1997), ‘ வள்ளியப்பா இலக்கிய விருது’ (2003), குழந்தை இலக்கிய ரத்னா’ (2008), ‘ குழந்தை இலக்கிய சாதனையாளர் விருது’ (2011), ‘ அருட்பணிச் செல்வர்’ , ‘ சிறந்த சமூக சேவகர்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார் குழந்தைக் கவிஞர் அமரர் அழ . வள்ளியப்பா அவர்கள