
குழந்தைகளைப் பற்றி எழுதுவது எளிது குழந்தைகளுக்காக எழுதுவது கடினம். = லா.ச.ரா எனக்கு (சப்தரிஷி லா.ச.ரா) குழந்தைகள் கதைகள் படிப்பதில் ஆர்வம் உண்டு.. இன்னும் சித்திரக்கதைகள் பவழத்தீவு...007 பாலு படித்துக் கொண்டுதானிருக்கிறேன் சுபாவின் காட்டு ராஜாவும் காற்றுக்குதிரையும், ஜெயமோகனின் பனிமனிதன் எஸ் ராமக்கிருஷ்ணனின்...ஏழுதலை நகரமும் படித்து ரசித்து சில குழந்தைகளுக்கு வாங்கியும் கொடுத்திருக்கிறேன். இப்பத்தய குழந்தைகள் படிக்கிறார்களோ இல்லையோ நான் இன்னும் ரஷ்யக்குழந்தைகள் கதைகளை படித்துக்கொண்டுதானிருக்கிறேன் .. லா.ச.ரா சொல்வார்..." குழந்தைகளைப்பற்றி எழுதுவது எளிது ..குழந்தைகளுக்காக எழுதுவது கடினம்...ஆனால் ரஷ்யர்கள் இதனை எளிதாகச்செய்கிறார்கள்" இதனை கன்னிகோவில் ராஜாவும் செய்கிறார்..வாழ்த்துக்கள். வாண்டுமாமாஅழ. வள்ளியப்பா.. குழ கதிரேசனுக்குப்பிறகு .... கன்னிகோவில் ராஜா! வாழ்க. வளர்க