மாடிப் பேருந்து

ஜனவரி 1997, மாடிப்பேருந்து A 18 என்ற வழிதடத்தில் பிராட்வேக்கும் வன்டலூருக்கும் இடையே இயக்கப்பட்டது. செப்டம்பர் 2008 - இல் மாடிப்பேருந்து, நெரிசலான போக்குவரத்து சாலைகளில் ஓட்டுவது சிக்கலானது என்ற காரணத்தை மேற்கோள் காட்டி, பேருந்து சேவை கைவிடப்பட்டது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் மாடிப்பேருந்து இயக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து சென்னையில் மாடிப்பேருந்து அண்ணா சாலையிலும் மற்றொன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அருகாமையில் உள்ள விமான ஓடுதளம் முடியும் இடத்திற்கு மிக சமீபத்தில் உள்ள சாலையில் இருந்து அசோக் பில்லர் வரை சிறிது காலம் இயக்கப்பட்டது. மாடிப்பேருந்து இயக்கும் பொழுது சாலையின் குறுக்கே எந்த விதமான மின்சாரக் கம்பி அல்லது தொலை தொடர்பு கம்பிகள் அல்லது வேறு வகையில் எந்தவிதமான குறுக்கீடு இருக்க கூடாது என்ற காரணத்தால் இரண்டே இரண்டு வழித்தடத்தில் மட்டும், தேர்வு செய்யப்பட்டு, மாடிப்பேருந்துகள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது...... நன்றி முகநூல்