அமெரிக்காவில் வசிப்பவர் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் ஏற்கனவே கவிதை கட்டுரை தன் முனைக் கவிதைகள் எனப் பல நூல்களை எழுதி இருப்பவர். சென்ற ஆண்டு "வான் மழையே வா" என்ற பெயரில் திருக்குறளின் அறத்துப்பால் குறள்களை மையப்படுத்தி சிறார் பாடலை எழுதி சிறுவர் உலகத்தில் நுழைந்தவர். இந்த ஆண்டு முதல் முறையாக நம் லாலிபாப் சிறுவர் உலகத்திற்கு "இசைப்பட வாழ்வோம் வா" என்ற பெயரில் திருக்குறள் கருத்துகளை சிறார் பாடலாக எழுதி இருக்கிறார் நவம்பர் 25ஆம் நாள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய பல்கலைக்கழகத்தில் நூல்கள் வெளியீடு வைத்திருக்கிறார். அவருக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக இனிய நல்வாழ்த்துகள்