சிறு பறவையின் துணிச்சல் ! கன்னிக்கோவில் இராஜா அந்த பூவரசு மரத்தில் இருக்கிறதே ஒரு சிறு பறவை ... அது எப்போதும் தன் தாயுடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்தது . அந்த சிறு பறவைக்கு பறக்கவும் , நடக்கவும் தெரியும் . ஆனாலும் இரைத் தேட செல்லாமல் , தன் அம்மா கொண்டுவரும் இரையைத் தின்று , அம்மாவின் தோள்மீது சவாரி செய்யும் . அதைத்தான் மிகவும் விரும்பியது . அம்மா பறவை எவ்வளவோ சொல்லியும் தன் மனதை மாற்றிக் கொள்ளவே இல்லை . “ என்னதான செய்வது இந்த பறவையை ” என நொந்துக் கொண்டது அம்மா பறவை . ஒருநாள் சிறு தானியத்திற்காக தன் அம்மாவிடம் சண்டையிட ஆரம்பித்தது . சண்டையின் முடிவில் “ இனி யார் துணையும் எனக்குத் தேவையில்லை . நான் இங்கிருந்து செல்கிறேன் . இனி தனியாகத்தான் இருப்பேன் ” என்று சொல்விட்டுப் பறந்தது . அம்மா பறவை எவ்வளவு தடுத்தும் அது தாயின் பேச்சைக் கேட்காமல் கூட்டைவிட்டுப் பறந்தது . கொஞ்ச தூரம் பறந்து சென்றதுமே அந்த சிறு பறவைக்கு பசிக்க ஆரம்பித்தது . ஒரு மரத்தில் இருந்த சிறு பழங்கள் அதன் கண்களுக்கு...