VisitYouTube#Childrensstory


Please visit: YouTube Video: //https://youtu.be/7kPKnlzkm8U

பிடிங்க... பிடிங்க... மயில் முட்டையை பிடிங்க...
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

"கட... கட... கட.. கடனு.... உருண்டு கொண்டே  போனது ஒரு முட்டை."
 "ஐய்யோ... என்னோட முட்டை உருண்டுகிட்டு போகுது யாராவது பிடிங்களேனு கத்திக் கொண்டே முட்டையின் பின்னால் ஓடியது மயில்."

"அச்சச்சோ! மயில் முட்டை உருளுதே... இதோ நான் பிடிக்கிறேன் "எதிர்த்து நின்றது நத்தை.

வேகமாக வந்த முட்டை, நத்தையை உருட்டிவிட்டு மேலும் உருண்டு போனது.

"..
 வலிக்குதே, முட்டை இவ்வளவு உறுதியாகவா இருக்கும்? நல்லவேலை...நசுக்காம போயிடுத்தே, தப்பிச்சோம்டா" மனதிற்குள் நினைத்தது நத்தை.

"என்னோட முட்டையை யாராவது காப்பாத்துங்களேன்! மயிலின் சத்தத்தைக் கேட்ட மரவட்டை, நான் தடுத்து நிறுத்துகிறேனு சொல்லி உடம்பை முறுக்கு போல சுருட்டியது".

"உருண்டு வந்த வேகத்தில் மரவட்டை மீது மோதிய முட்டை, அதையும் சேர்த்து உருட்டிக் கொண்டே போனது. "

"அச்சச்சோ! முட்டை என்னை இப்படி உருட்டுகிறதே ,கதறத் தொடங்கியது மரவட்டை."

"அய்யய்யோ... என் முட்டையை யாராவது காப்பாத்துங்களேன், பின்னாலேயே ஓடி வந்து கொண்டிருந்தது மயில்"

"கொய்யாப் பழத்தைக் கொறித்துக் கொண்டிருந்தச் சின்ன அணில், நான் போய் முட்டையைப் புடிக்கிறேன்" சொல்லிக் கொண்டே மரத்தில் இருந்து இறங்கியது.

"நாம இந்த வழியாப் போனா முட்டையின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்திடலாம்னு  நினைத்த அணில் குறுக்கு பாதையில் ஓடியது".

"முட்டை உருண்டு கொண்டே இருந்தது. குறுக்கு பாதையின் முனைக்கு அணில் வருவதற்குள் முட்டை உருண்டு முன்னே போய்க் கொண்டிருந்தது."

"மயிலக்கா... கவலைப்படாதே, நான் வேகமாகப் போய் பிடித்து விடுகிறேன்" சொல்லிக் கொண்டே வேகமாக ஓடியது அணில்.

"ரொம்ப நன்றி தம்பி! நானும் பின்னாடியே வரேன்" தோகையைத் தூக்கிக் கொண்டு ஓடியது மயில்.

"என்ன அங்க சத்தம் கேட்குது? எட்டிப் பார்த்தது நல்லப்பாம்பு.
முட்டை உருண்டு வருவதைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறியது."

"ஆகா... மயில் முட்டை. இதை விழுங்கி எத்தனை நாள் ஆகுது?. இன்னக்கி நல்ல விருந்துதான். மனதிற்குள் நினைத்துக் கொண்டு முட்டையை நோக்கி வளைந்து நெளிந்து ஊர்ந்தது".

"நல்ல பாம்பை பார்த்ததும் மயிலுக்கு பக்கென்று இருந்தது.
..... பாம்பு! பாம்பு என் முட்டைய விழுங்கப் போகுது.சீக்கிரம் முட்டையைப் பிடி!" அணில் காதில் விழும்படிக் கத்தியது மயில்.

"கவலைப்படாதே, அக்கா நான் பார்த்துக் கொள்கிறேன்." வேகத்தைக் கூட்டியது அணில்.

மயில் முட்டை உருள.. உருள....

ஊர்ந்தது பாம்பு...

தாவித் தாவி ஓடியது அணில்...

வேகமாக ஓடியது மயில் ...

நடந்து வந்தது மரவட்டை...

அதன் பின்னே
மெல்ல ஊர்ந்தது நத்தை... 

"எப்படியாவது என் முட்டையைக் காப்பாற்ற வேண்டுமென வேகமாக ஓடிய  மயிலைப் பார்த்தது
 காட்டுக்கோழி"

"மயிலக்கா... மயிலக்கா எங்கே  இவ்வளவு வேகமா போறிங்க?என்றது

"அந்த மலைமேட்டுல இருந்து என் முட்டை உருண்டது. அதைப் பிடிக்க நத்தை வந்தது.
அதை தள்ளிவிட்டு மீண்டும் உருண்டது முட்டை."

...

"அப்புறம் மரவட்டை கூடப் பிடிக்க உதவி செய்தது .அதையும் சேர்த்துக் கொண்டே உருட்டியது முட்டை."

ஓகோ...

"அணில் தம்பி குறுக்குப் பாதையில் வந்து பிடிக்க நினைச்சானா..."

"பிடிச்சிட்டானா?"

"இல்லை... இல்லை, அதற்குள் உருண்டு கொண்டே சென்றது முட்டை."

அப்புறம்...

"எங்க சத்தத்தைக் கேட்டு நல்ல பாம்பு வந்தது." 

"பாம்பா?" அதிர்ச்சியானது   காட்டுக்கோழி.

"ஆமா. அந்த பாம்பு என் முட்டையைப் பிடிப்பதற்குள் உருண்டு ஓடியது."

"அப்பாடா! முட்டை தப்பியது...."

"எங்க தப்பியது? அதோ பாரு ,எல்லாரையும் விட அந்த பாம்புதான் முட்டை கிட்ட போயிட்டு இருக்கு" வருந்தியது மயில்.

"காட்டுக்கோழி பார்த்தது..."

"முட்டை உருண்டு கொண்டே போகுது..."

"பாம்பு வளைந்து நெளிந்து போகுது..."

"அணில் தாவித் தாவி போகுது..."

"மயில் ஓடிக் கொண்டிருக்கிறது...
மரவட்டை நடந்து வருது..."

"அப்புறம் நத்தை ஊர்ந்து வருது..."

இவற்றை பார்த்து" ஹா ஹா ஹா ஹா"எனச் சிரித்தது கோழி.

"கோழி, என் நிலமையைப் பார்த்தால் உனக்கு சிரிக்க தோணுதா? "
கோவப்பட்டது மயில்.

"சிரிக்காம என்ன செய்யறது?"

பாம்பு வளைந்து நெளிந்து ஓடுவதும்..

அணில் தாவித் தாவி செல்வதும் ...

மரவட்டை மெதுவாய் நடந்து வருவதும் ...

நத்தை ஊர்ந்து வருவதும் ..

எல்லோருக்கும் தெரியும் ."ஆனால், நீ நடந்து ஓடுவதுதான் புதுமையா இருக்கு என்றது."

"புரியாமல் தலையைத் தூக்கி தன் தோகையை சுறுக்கிக் கொண்டது."மயில்

"நாங்க கோழிங்க... எங்களால கொஞ்ச தூரம்தான் பறக்க முடியும். நீ வேகமா பறக்கக் கூடிய மயில் தானேபறந்து போயிருந்தா உன் முட்டையை நீயே எளிதாகக் காப்பாத்தி இருக்கலாமே."என்றது கோழி.

"அட ! ஆமாம்ல! எனக்கு ஏன் இது புரியாம போச்சு?

இப்பப் பாரு! கண் இமைக்கும் நேரத்தில் சொய்ங்.... பறந்து சென்று முட்டை உருள்வதை தடுத்தது" மயில்

"முட்டையின் அருகே மயிலைப் பார்த்ததும் புதருக்குள் ஊர்ந்து மறைந்துக் கொண்டது பாம்பு."

"அருகில் வந்த அணிலுக்கும்கோழிக்கும் நன்றி சொல்லிவிட்டு, என்னிடம் உள்ள திறமையை என் பதட்டமே மறைத்ததுஎன்றது மயில்

"அவசரத்தில் பதட்டமானால் இப்படியான நிலை சில நேரங்களில் நிகழக்கூடும். இனிமேலாவது கவனமாக இருப்போம் "என்று சொல்லி ஓடியது காட்டுக்கோழி.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01