#ChennaiBookFair2023

 #ChennaiBookFair2023


 


நடந்த வலியின் வேர்களை, கால்களில் ஏந்தி கொண்டு புத்தகக் காட்சியை விட்டு வெளியேறினேன்.


கருப்பு குதிரை என நின்று இருந்த என் வாகனம்,  தூசி படிந்து கேட்பாரற்று படுத்து கிடக்கும் மானிடனைப் போல இருந்தது.


திறவுகோல் திறந்து பழைய துணி ஒன்றை எழுத்து துடைத்த பின் நத்தையைப் போல முன் சென்ற வண்டிகளின் பின் சென்று கொண்டிருந்தேன்.


"தம்பி! தம்பி!" என்று ஒரு அழைப்பு குரல்.


வலது பக்கம் திரும்பிப் பார்த்தால் ஔவை மூதாட்டியையொத்த ஒரு ஒளவை நின்று இருந்தார்


"என்ன... அங்கனக்குள்ள கொண்டு போய் விட்டுடுறீங்களா?" என அனுமதி கேட்டார்.


"வாங்கம்மா வாங்க" என்றேன்.


ஏறி அமர்ந்ததும் "47ஏ பஸ் ஸ்டாண்ட்ல விட்டுடுங்க. நீங்க அந்த பக்கம் தானே போறீங்க? என்றார்.


"இல்லம்மா நான் மயிலாப்பூர் போறேன். ஆனா கொண்டு போய் விடறேன்"  என்றேன். 


"ஆமாம் தம்பி. உங்கள் பெயர் என்ன?

"உங்களுக்கு அறிமுகமான கன்னிக்கோவில் ராஜாதான்" என்றேன்.


"அட! நீங்களா! அதானே வாஞ்சையோடு கூப்பிடும் போது நமக்கு தெரிஞ்சவங்கதான்னு  நினைச்சேன். அடையாளம் தெரியல தம்பி" என்றார்.


பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டதும் அந்தத் தமிழ் ஒளவை: திருமதி #தாயம்மாள் அறவாணன் "நல்லா இருங்க தம்பி" என்று கை உயர்த்தி வாழ்த்தினார்.


ஆயிரம்  நூல்களை வாங்கிப் படித்த மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன்.


படம் உதவி: திரு. அண்ணா கண்ணன்

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01