
வெற்றி விளிம்பில் முளைத்திருக்கும் மகிழ்மனம்! Kannikovil Raja எப்போதும் மகிழ்மனம் வாய்ப்பது ஒருசிலருக்கே அமைந்துவிடுகிறது. ஹைக்கூ புயலில் சிக்கிய படகாய் இருந்த காலந்தொட்டே அறிமுகமானவர்தான் என்றாலும், அவ்வப்போது மட்டுமே பார்த்து பேசுகிற வாய்ப்பே இருந்தது. நண்பர் புதுவைத் தமிழ்நெஞ்சனுடன் புதுச்சேரியில் துளிப்பா நூற்றாண்டை கொண்டாட முயற்சித்த வேளையில் "தோழர் என்னுடைய நூலையும் வெளியிடலாமா?" என வினாக்குறியோடு அணுகியவர். அதுஎன்னவென்றே தெரியவில்லை. எப்போதும் யாருக்கும் அவ்வளவு விரைவாக நூலை வடிவமைத்துக் கொடுத்ததாய் சரித்திரம். பூகோளம் எதுவும் எனக்கில்லை. என் வேலை அதுமாதிரி. ஆனால் இவரின் (மகரந்தம் மறைத்த மொட்டு) நூல் இரண்டரை நாளில் வடிவமைத்து, அச்சடித்து வெளிவந்து நூல் வெளியீடும் நடந்தேறியது. அதனை கருத்தில் கொண்டு இப்போது 'குளிர் தூவும் ஆறு" என்கிற தலைப்பில் அமைந்த புதுக்கவிதையின் உருவினூடே நவீனமாய் அமைந்த கவிதைகள் கொண்ட நூலைத் தந்தார். வழக்கம் போல் இந்நூலுக்கு தாமதம் ஆனது. ஆனால் என்னால் அல்ல.. அட்டைப்படத்தினால்... அதற்கு பாலமாய் அமைந்தவர் நறுமுகை ஜெ.ரா. இப...