butterfly angel

நூல் விமர்சனம் நிர்மலாதேவி பன்னீர்செல்வம் மலேசியா. நூல் : பட்டாம்பூச்சி தேவதை நூலாசிரியர் : கன்னிக்கோவில் இராஜா வெளியீடு : பாவைமதி வெளியீடு, எண். 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு,தண்டையார்ப்பேட்டை, சென்னை - 600 081. ணூ94441 74272 112 பக்கங்கள் விலை ₹100/- பட்டாம்பூச்சியைப் பிடிக்காதக் குழந்தைகள் இலர். அவ்வகையில், கதாசிரியர் அவர்கள் குழந்தைகள் அதிகம் விரும்பும் பட்டாம்பூச்சியையே தன் கதையின் நாயகியாகத் தேர்ந்தெடுத்திருப்பது மிகச் சிறப்பு. மனிதனுக்கு மனம் இருப்பதைப் போல பிராணிகளுக்கும் இதயம் உண்டு என கதை அழகாகக் கூறுகிறது. தன் அன்றாட வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மனிதன் எத்தனை பாடுபடுகிறானோ, அதுபோல பிராணிகளும் தனது வயிற்றுப்பசியைப் போக்குவதற்கு எத்தனை இடர்பாடுகளை ஒவ்வொரு நாளும் கடக்கின்றன என்பதை இக்கதையின் வழி நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. மென்மையான பட்டாம்பூச்சிக்கு கதையில் எதிரியாக முரலும் வண்டினை தேர்ந்தெடுத்திருப்பது மிக பொருத்தமாக அமையப்பெற்றுள்ளது. அவை இரண்டுக்கும் நடக்கும் உரையாடல்கள் மிக இயல்பாகவும் குழந்தைத்தனமாகவும் எழுதப்பட்டிருப்பது, நிச்சயம் இக்கதையை...