நூல் விமர்சனம்

எழுத்தாளர் கவிச்சுரபி சுப. சந்திரசேகரன்
ஆசிரியர்: மின்னல் தமிழ்பணி இதழ், சென்னை

நூல் : சப்போட்டா (சிறுவர் கதைகள்)
நூலாசிரியர் : கன்னிக்கோவில் இராஜா
வெளியீடு : வானம் பதிப்பகம், எண். வி22, 6வது அவென்யூ, அழகாபுரி நகர், இராமாபுரம், சென்னை - 600 089. cell: 91765 49991
80 பக்கங்கள்  விலை ₹50/-

கன்னிக்கோவில் இராஜா எழுதிய ‘சப்போட்டா’ சிறார் கதைகள், படிக்க.. படிக்க... மனத்திற்கு பரவசம் தந்தது. கதைகளோடு மூழ்கிப் படித்து அதனோடு ஒன்றிவிட்டபோது குழந்தைகளுக்கு ஏற்பட்டக் குதூகலம்தான் ஏற்பட்டது. முப்பது நிமிடம் நான் என்னை மறந்து சிறுவனாகிவிட்டேன். கதைபோகும் போக்கும், கதை சொல்லும் விதமும் கன்னிக்கோவில் இராஜாவின் எழுத்தும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டி வசப்படுத்துகிறது.
சிறுவனாகவே இருந்து விடக்கூடாதா என்றும், அப்படியே அந்த மகிழ்ச்சி உலகத்தில் மெய் மறந்து நிம்மதியாய் இருந்துவிடலாம். பத்துக் கதையும் முத்துக்கதைதான். சிறார்களின் சொத்துக் கதைதான். பெரியவர்களுக்கும் வித்துக் கதைதான். நடை இயல்பாக இருப்பதால் எளிதாகப் படிக்க முடிகிறது. முடிவில் ஒரு பாடம் கற்பிக்கிறது. முதல் கதையே முத்திரைக் கதையாக உயர்ந்து காட்டுகிறது. உள்ளே மற்ற கதைகளைப் படிக்க அழைத்துச் செல்கிறது. ‘புதைத்த பல் முளைக்குமா?’ கதையைப் படித்து சிரிப்பும் வந்தது, சிந்திக்கவும் வைத்தது. நத்தைக் கதை மனிதர்களுக்கு நல்ல பாடம். அறிவை விழிக்க வைத்தது.
சிறார் படைப்பில் சிகரம் தொட்டு வெற்றி நடைபோடுகிறார். இராஜாவின் ‘சப்போட்டா’ இனித்தது. நல்ல சிறார்களாக... மாணிக்கங்களாக சிறார்கள் மாற வேண்டுமென்றால் இதுபோன்ற நூல்களை வாங்கிப் படித்து சிறுவயதிலேயே சிந்தனையாளர்களாக மாற வேண்டும். கன்னிக்கோவில் இராசாவின் எழுத்தில் மயக்கம் இருக்கிறது. படைப்பாற்றல் மனித நன்மைக்கு நிழலாக இருக்கிறது. வாழ்த்துகள். இன்னும் படைத்து வளர்க வாழ்க.
நூலை இணையவழி பெற: https://www.commonfolks.in/books/d/sappotta 

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01