குழந்தை இலக்கிய ரத்னா #வள்ளிதாசன் (எ) ஜெ.எத்திராஜன் ஐயா மறைவு

இந்தியாவிலேயே தலை சிறந்த குழந்தை எழுத்தாளர் எனப் புகழ் பெற்ற அமரர் டாக்டர். பூவண்ணன் அவர்கள் சிறுவர் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகக் காரணமாக இருந்த மூத்த குழந்தை எழுத்தாளர் ஜெ. எத்திராஜன் 1947-ல் பள்ளி மாணவராக இருந்தபோதே சிறுவருக்காக எழுதத் தொடங்கினார்.

இளம் வயதிலேயேமான்’, ‘கரும்பு’ ஆகிய சிறுவர் வார இதழ்களுக்குத் துணை ஆசிரியராக இருந்தவர். சிறுவருக்காக இவர் எழுதிய கதைகளும் நாவல்களும் பல புத்தகங்களாக வெளி வந்தள்ளன. இவர் எழுதியஆவணத்தின் கதை” என்னும் நூல் 1995-ல் தமிழ்நாடு அரசின் குழந்தை இலக்கியப் பரிசினைப் பெற்றது.


ஏற்கனவேபண்டித ரத்னா’ என்னும் பட்டம் பெற்ற இவர்,குழந்தை இலக்கிய மாமணி’ (1997), ‘வள்ளியப்பா இலக்கிய விருது’ (2003), குழந்தை இலக்கிய ரத்னா’ (2008), ‘குழந்தை இலக்கிய சாதனையாளர் விருது’ (2011), ‘அருட்பணிச் செல்வர்’, ‘சிறந்த சமூக சேவகர்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்


குழந்தைக் கவிஞர் அமரர் அழ. வள்ளியப்பா அவர்களிடம் கொண்ட ஈடுபாடு காரணமாகவள்ளிதாசன்’ என்ற புனைப்பெயரில் பல படைப்புகளை இயற்றியுள்ளார்.


2007-ல் இந்து ஆங்கில நாளேடு இவரைசமூக சிந்தனைகள் கொண்ட இலக்கியவாதி’ (literature with sicial thoughts) எனப் பாராட்டி கட்டுரை வெளியிட்டது.


தமிழ்நாடு ஆவணக் காப்பக உதவி ஆணையராகப் (Assistant Commissioner of Archives) பணியாற்றி 1990 -ல் ஓய்வு பெற்ற பிறகும் இவரின் சிறுவர் இலக்கியப் பணி தொடர்ந்தது. அது இன்றோடு நிறைவுற்றது. அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் பெயர் சொல்லும்.


கன்னிக்கோவில் இராஜா

நிறுவனர்: லாலிபாப் சிறுவர் உலகம்

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01