Tamil Calender

 "சார் கூரியர்" என்ற குரல் கேட்டு வாசலுக்கு சென்றால் உருண்டை வடிவில் ஒன்றை தந்தார். 


"நன்றி" சொல்லி விட்டு அனுப்புநர் யார் என்று பார்த்தேன். "வசந்தா பதிப்பகம்" என்றிருந்தது.

சதுரமான கூரியர்களையே கண்ட எனக்கு உருள் வடிவம் ஆர்வத்தைத் தூண்டியது.

பிரித்தேன்

பிரித்தேன்

ரித்தேன்

த்தேன்

தேன்


ஆம் . தேன் தான். குழந்தை இலக்கியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட "கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்களின் ஒளிப்படம் தாங்கிய "தமிழ் நாள்காட்டி" வந்திருந்தது. 

சிறப்பாக ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு தமிழ் சங்கங்களை இணைந்திருப்பதும், தமிழ்ச் சான்றோர்களின் பிறந்தநாளை பதிவிட்டிருப்பதும் கூடுதல் மகிழ்வைத் தந்தது. 

இயக்குனர், பதிப்பாளர், இதழாசிரியர் #முனைவர்_மோ_பாட்டழகன் அவர்களின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.

லாலிபாப் சிறுவர் உலகத்தின் சார்பில் வாழ்த்தி, பாராட்டி மகிழ்கிறேன் ‌

வாழ்க தமிழ்...

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01