#நூல்அறிமுகம் இன்று #தினமணி சிறுவர்மணியில் #லாலிபாப்_சிறுவர்_உலகம் வெளியிட்ட " #யானைக்கு_உதவிய_எறும்புகள் - முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளா" " #வாலைத்_தேடிய_பல்லி - நல்லாசிரியர் வ. விஜயலட்சுமி" ஆகியோர் எழுதிய சிறுவர் கதைகள் நூல் அறிமுகம்.. நன்றி: தினமணி
தமுஎகச அறம் முகிழ் வாசிப்பறை முகிழ் நாட்காட்டி ஆகஸ்ட் மாத எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜாவின் படைப்புகளோடு குழந்தைகள் கொண்டாட்டம்..... வாங்க செல்லங்களா...... கதை சொல்லி பாடல் பாடி புத்தகம் வாசித்து கொண்டாடி மகிழ்ந்திடலாம்...... கன்னிக்கோவில் ராஜாவின் படைப்புகளோடு குழந்தைகள் கொண்டாட்டம் நிகழ்வின் யூடியூப் லிங்க் https://youtu.be/ASbwPAAQlI4 நன்றி: முகிழ் வாசிப்பறை
பெங்களூரில் #TaleTribe 's story session (in English) அமைப்பு மூலம் குழந்தைகளுக்கு வார வாரம் கதை சொல்லி வருகிறார் திருமதி #தாமரைச்செல்வி அவர்கள். இந்த வாரம் #நிவேதிதா_பதிப்பகம் வெளியிட்ட #நெல்_மரப்பறவை என்ற புத்தகத்தில் இருந்து #அம்மாவைக் #காணோம் என்கிற நான் எழுதிய கதையை ஆங்கிலத்தில் சொல்ல... சொல்ல... அனைத்து குழந்தைகளுக்கும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் நிகழ்வின் முடிவில் நிறைய குழந்தைகள் தங்களுக்கான கேள்விகளை ஆங்கிலத்திலேயே கேட்டார்கள். அந்த நிகழ்வு எனக்கு பெரும் மகிழ்வை அளித்தது. கதை சொல்லும்போது கதை சொல்லியான தாமரைச்செல்வி அவர்கள் உடல் மொழியோடு கைகளில் முயல் மற்றும் கரடி பொம்மைகளை வைத்து கதை சொன்ன விதம் குழந்தைகளைப் போலவே என்னையும் கவர்ந்தது. அந்தக் கதையின் இடையிடையே குழந்தைகள் கேள்வி கேட்க இவர் பதில் சொல்லிக்கொண்டே கதையை முடித்த விதம் மிகவும் பாராட்டுக்கு உரியது. கதை கேட்க வந்த குழந்தைகள் கேள்வி கேட்க விரும்புவது மிகவும் முக்கியமானது. அந்த விதத்தில் இன்றைய நிகழ்வில் இந்த கதையின் வாயிலாக நிறைய கேள்விகள் உருவாகின. முதல் முறையாக எனது கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி கேட...