லாலிபாப் சிறுவர் உலகத்தை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 450 குழந்தைகளை ஒருங்கிணைத்து தினமும் அவர்களுக்கான ஏதாவது ஒரு செயலாக்கத்தை/பயிற்சியைக் கொடுத்து வருகிறார் #சிறுவர்_இலக்கியச்_செம்மல் #கன்னிக்கோவில்_இராஜா அவர்கள். ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், எதாவது கைவினைப் பொருட்கள் செய்தல் இப்படித் தொடர்ந்து குழந்தைகளோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் முதலில் பதிவு செய்து கொள்கிறேன். தான் மட்டும் உயராமல், தனக்கென மட்டும் என்று யோசிக்காமல் இளைய தலைமுறையினருக்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, அதையே தனது இலக்காக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களோடு லாலிபாப் சிறுவர் உலகத்தில் இணைந்து பயணிப்பது பெருமகிழ்ச்சி. இன்றைய லாலிபாப் சிறுவர் உலகத்தின் குழந்தைகளுக்கான ஒரு பயிற்சியாக கொடுக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சியை வரைக என்ற வகையில் #ஹரீஷ் என்ற குழந்தை கன்னிக்கோவில் இராஜா அவர்களையும், வண்ணத்துப்பூச்சியையும் இணைத்து அற்புதமாக ஓவ...
தான் எழுதிய பல கதைகளில் இருந்து வெறும் ஏழு கதைகளை எடுத்து *லட்சத்தில் ஒருத்தி* என்ற பெயரில் சிறுகதை நூலாக்க முடிந்தார் எழுத்தாளர் *செம்மை உமா* அவர்கள் *நூலேணி பதிப்பகம்* பதிப்பித்த இந்த நூல் இன்று *தினமலர்* இதழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. *எழுத்தாளரின் முதல் நூலை வாங்கி பாராட்டுவோம். அதன்மூலம் மகிழ்ச்சியைப் பரப்புவோம்.* நூல் விலை ₹130 + அஞ்சல் தொகை ₹20 *மொத்தம் ₹150/- செலுத்துங்கள். சிறந்த சிறுகதை நூல் இல்லம் தேடி வரும்*
#லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் புதிய_முயற்சி சிறுவர் இலக்கியத்தில் பலரின் பங்களிப்பு அளப்பரியது. புதுவையைச் சேர்ந்த கவிஞரேறு #வாணிதாசன் அவர்கள் குழந்தை இலக்கியத்திற்காக பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களில் இருந்து சிலவற்றை தொகுத்து * #மரக்குதிரை தலைப்பில் வெளியிடுகிறோம். லாலிபாப் குழந்தைகள் பாடும் இவரின் பாடல் காணொளியை QR code வடிவில் மாற்றும் பணி நடைபெறுகிறது. இளைய சமுதாயத்திற்கு இவர்களின் பாடல்களைக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் #லாலிபாப் சிறுவர் உலகம் மூலம் ஈடுபட்டுள்ளோம். *** தங்களால் இயன்ற அளவு நூலைப் பெற்று மாணவர்களுக்கு பரிசளிக்கலாமே... **" இதற்கு உறுதுணையாக இருந்த கவிஞரேறு வாணிதாசன் அவர்களின் பெயரன் திரு.முருகன் Murugan Murugan அவர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக நன்றி கவிஞரேறு வாணிதாசன் (சூலை 22 1915 - ஆகத்து 7, 1974) புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். மேலும் தகவலுக்கு https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%...
Comments
Post a Comment