கதையை ஆங்கிலத்தில் சொல்ல... சொல்ல...

 பெங்களூரில் #TaleTribe's story session (in English) அமைப்பு மூலம் குழந்தைகளுக்கு வார வாரம் கதை சொல்லி வருகிறார் திருமதி #தாமரைச்செல்வி அவர்கள்.

இந்த வாரம் #நிவேதிதா_பதிப்பகம் வெளியிட்ட #நெல்_மரப்பறவை என்ற புத்தகத்தில் இருந்து #அம்மாவைக் #காணோம் என்கிற நான் எழுதிய கதையை ஆங்கிலத்தில் சொல்ல... சொல்ல... அனைத்து குழந்தைகளுக்கும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்‌
நிகழ்வின் முடிவில் நிறைய குழந்தைகள் தங்களுக்கான கேள்விகளை ஆங்கிலத்திலேயே கேட்டார்கள். அந்த நிகழ்வு எனக்கு பெரும் மகிழ்வை அளித்தது.
கதை சொல்லும்போது கதை சொல்லியான தாமரைச்செல்வி அவர்கள் உடல் மொழியோடு கைகளில் முயல் மற்றும் கரடி பொம்மைகளை வைத்து கதை சொன்ன விதம் குழந்தைகளைப் போலவே என்னையும் கவர்ந்தது.
அந்தக் கதையின் இடையிடையே குழந்தைகள் கேள்வி கேட்க இவர் பதில் சொல்லிக்கொண்டே கதையை முடித்த விதம் மிகவும் பாராட்டுக்கு உரியது.
கதை கேட்க வந்த குழந்தைகள் கேள்வி கேட்க விரும்புவது மிகவும் முக்கியமானது. அந்த விதத்தில் இன்றைய நிகழ்வில் இந்த கதையின் வாயிலாக நிறைய கேள்விகள் உருவாகின.
முதல் முறையாக எனது கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி கேட்டது எனக்கு பெரும் மகிழ்வை தந்தது.
குழந்தைகள் உலகம் மிகவும் மகிழ்ச்சியான உலகம். அங்கிருப்பது எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது.
கதை சொன்ன திருமதி. தாமரைச்செல்வி மற்றும் கதைக் கேட்க வந்திருந்த குழந்தைகளுக்கும் நன்றி



Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01