புத்தகங்களைப் பரிசளிப்போம்


 *நூல்களைப்_பரிசளிப்போம்*

புலம்பெயர்ந்து அயல்நாட்டில் வசிக்கும் *திரு. இளமாறன் Elamaran Perumal மற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி Anbudan Ananthi அவர்கள்* ஒவ்வொரு முறையும் தமிழ்வழி படிக்கக்கூடிய பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் புத்தகங்களை வாங்கி நன்கொடையாக அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் *ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், #தேவர்மலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு* புத்தகங்களை வழங்கியிருக்கிறார்கள்.

இதில் பல படைப்பாளிகளின் நூல்கள் சென்று இருப்பது பாராட்டுக்குரியது இவர்களுக்கு *லாலிபாப் சிறுவர் உலகம்* சார்பாக வாழ்த்துகள்.

இது போல பலரும் நூல்களை வாங்கி பரிசளித்தால் படைப்பாளிகளுக்கும் படிப்பவர்களுக்கும் மிகுந்த மன நிறைவைத் தரும் என்பதில் ஐயமில்லை. மகிழ்ச்சி பரவட்டும்.

வழங்கப்பட்ட நூல்கள் & படைப்பாளர்கள்*

1. *வாலைத் தேடிய பல்லி

(சிறுவர் கதைகள்)* நல்லாசிரியர் வ. விஜயலட்சுமி, புதுச்சேரி

2. *சென்னி முன்னா செண்பை கிராமம் (நாவல்)*

மரு. சூர்யா, கன்யாகுமரி.

3. *மூணு கண்ண வந்துட்டான் (சிறுவர் கதைகள்)*

ஹரிவர்ஷ்னி ராஜேஷ், கோவை

*கன்னிக்கோவில் இராஜாவின் நூல்கள்:*


4. மே.. மே.. ஆட்டுக்குட்டி (சிறுவர் பாடல்)

5. சிக்கு புக்கு ரயில்பூச்சி (கதைப் பாடல்) 

6. அணில் கடித்த கொய்யா (சிறுவர் கதைகள்)

7. ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி (சிறுவர் கதைகள்)

8. பிடிங்க.. பிடிங்க.. மயில் முட்டையைப் பிடிங்க (சிறுவர் கதைகள்)

9. கீக்கீ கிளியக்கா (கதைப் பாடல்)

Comments

Post a Comment

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01