மாணவி எழுதிய கதை புத்தகம்

 



#புத்தகஅறிமுகம்

குழந்தைகளிடம் படைப்புத்திறன் மண்ணுக்குள் புதைந்த விதை போல மறைந்து இருக்கிறது. விதைகளை மீட்டெடுக்கும் மழைத்துளி போல நாம் அதை வெளிக்கொணர வேண்டியது அவசியமாகிறது.

பெற்றோர், ஆசிரியர், குழந்தை நலனில் அக்கறை கொண்டோர் என யாராவது ஒருவர் அதை வெளிக் கொண்டுவரும் பட்சத்தில் சிறுவர் இலக்கியம் தழைத்தோங்கும்.

சமகாலத்தில் சிறுவர்க்கான படைப்புகளை சிறுவர்களே படைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

அந்தத் தொடர் ஓட்டத்தில் இதோ #லாலிபாப்_சிறுவர்_உலகம்  சார்பாக வெளிவந்துள்ளது #சிறகடிக்கும்_பட்டாம்பூச்சி சிறுவர் கதைகள் நூல்

சென்னை, பட்டாபிராமில் வசிக்கும் #பிரவந்திகா தனது 12 கதைகளை நூலாக்கி இருக்கிறார்.

இந்நூலில் பல சிறுவர்கள் ஓவியங்களும் வரைந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

இளம் எழுத்தாளர் பிரவந்திகா மற்றும் பெற்றோருக்கும் வாழ்த்துகள் 


மகிழ்ச்சி பரவட்டும்.


நூல்: #சிறகடிக்கும்_பட்டாம்பூச்சி

நூலாசிரியர் : #சு_பிரவந்திகா

முதற்பதிப்பு: 7.11.2021 

வெளியீடு: #லாலிபாப்_சிறுவர்_உலகம்

Comments

  1. லாலிபாப் சிறுவர் உலகம் நிறுவனர் திருமிகு. கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு பிரவந்திகா குடும்பத்தாரின் மனமகிழ் நன்றி 🙏

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பிரவந்திகா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01