சிக்கு புக்கு ரயில் பூச்சி’, ‘கீக்கீ கிளியக்கா

நவீன முறையில் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து பாடல் கேட்கும் வாய்ப்பும் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது


எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜாவின் ‘சிக்கு புக்கு ரயில் பூச்சி’, ‘கீக்கீ கிளியக்கா’ இரண்டு நூல்களும் படித்தேன். இன்னும் கேட்கவில்லை. இரண்டுமே அருமையாக உள்ளன. உப்புவித்த பாப்பாவின் அப்பா நிலைமை, ஐயோ பாவம்! மாமரத்து ஊஞ்சல் சுவையான பாடல். மழை நீரைச் சேமிக்கலாம் - காட்சிப்படுத்தும் அழகிய பாடல் .‘பூனை சவாரி’ கற்பனை செய்து பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. ‘வீசி மகிழலாம்’ பாடலில் விதைப்பந்து பற்றிய செய்தி அருமை. முயலுக்காக மேகம் இறங்கி வந்து தாகம் தீர்த்த கற்பனையும் சிறப்பு. 

குழந்தை ஏறிய குதிரை - குழந்தை உளவியலைப் படம் பிடிக்கிறது. கொசுவை அடித்து அடிபட்ட அனுபவம் அழகிய பாடலானது. நிழலுக்கு பயந்த புலி கற்பனை அருமை. இரண்டு நூல்களும் வண்ண அட்டைகளுடன், அழகான படங்கள் மற்றும் ஓவியங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளன. நவீன முறையில் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து பாடல் கேட்கும் வாய்ப்பும் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வாழ்த்துகள். 

அன்புடன்,

தேவி நாச்சியப்பன்

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை