நூல் போட்டி

 *தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2021* 

 

2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2020, 2021ஆம் ஆண்டுகளில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூல்/ குறுந்தகடு இரண்டு பிரதிகள் *2022 ஏப்ரல் 15* ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். 

 

அனுப்ப வேண்டிய முகவரி:

பொதுச்செயலாளர், 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 

57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,

(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்) 

மதுரை- 625001  தொலைபேசி: 0452-2341669 

 

பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் “தமுஎகச விருது”,  *சான்றிதழ், தொகை ரூ.10,000/-* ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும். 

 

விருதுகள் 

 

1. தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல் 


2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது: நாவல் 


3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு 


4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: கலை இலக்கிய விமர்சன நூல் 


5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு

 

6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு 


7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு 


8. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் 


9 என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவுவிருது: ஆவணப்படம்


10. தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: 

மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் 


11. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது:

 குழந்தைகள் இலக்கிய நூல்  

 

 

பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:   

 

12. மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது: நாட்டுப்புறக் கலைச்சுடர்


13. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்


14. த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்


15. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை

 வாழ்த்துகளுடன்,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொ)   ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01