நூல் போட்டிகள்

வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் - 2022 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த ஏழு வருடங்களாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்றே..! அந்த வகையில் இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின் "முப்பெரும் விழா" மேடையில், இவ்வருடத்திற்கான 'தமிழ் இலக்கிய விருதுகள்' வழங்கப்படவுள்ளன. முந்தைய வருடங்களில் சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக எழுத்தாளர் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த 2019 முதல் சிறந்த சிறார் இலக்கியம் , சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய மூன்று புதிய பிரிவுகள் இணைக்கப்பட்டன. கூடுதலாக கடந்த ஆண்டில் இருந்து சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு விருதும் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த ஒன்பது பிரிவுகளிலும் விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு சேர்த்து ரூபாய் 5000 பரிசுத் தொகையும் வழங்கப்படும். முழுக்க தேர...