#நூல்_அறிமுகம் #பேரரசர்_இராசராச_சோழனின் #கொள்ளுப்பேரன் #ஐசக்_நியூட்டன் இப்படி ஒரு பெயரை தனது சிறார் அறிவியல் கதை நூலுக்கு சூட்டியிருப்பதன் மூலம் கவன ஈர்ப்பு கொள்ள செய்கிறார் புதுவையை சேர்ந்த எழுத்தாளர் கு.அ. #தமிழ்மொழி . துளிப்பா, புதுப்பா, சிறார் பாடல், சிறார் சிறுகதைகள், மொழிபெயர்ப்பு பா எனப் பல்வேறு வகைகளில் நூல்களை வெளியிட்டு இருக்கும் இவர் தற்போது சிறார்களுக்காக அறிவியல் சிறுகதைகளும் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. இந்த நூலில் மொத்தம் 18 கதைகள் இருக்கின்றன ஒவ்வொரு கதைக்குள்ளும் சிறு சிறு அறிவியல் ஒளிந்திருக்கிறது. அறிவியலோடு சுற்றுச்சூழல், ஒலி மாசு, நெகிழி சிக்கல் எனச் சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்தையும் கதைகளாக்கி சிறார்களுக்கு கொடுத்து இருக்கிறார். புவி ஈர்ப்பு விசையைக் குறித்து வினா எழுப்பினால் ஐசக் நியூட்டனை விடையாக தருவோம் ஆனால் ஐசக் நியூட்டனுக்கு முன்னாலேயே பேரரசர் ராஜ ராஜ சோழனின் புவியீர்ப்பு சான்றாக தஞ்சை பெரிய கோயிலை காட்டுகிறார்.. இந்தப் படைப்பாளி. கதையின் கதா மாந்தர்கள் அனைவரின் பேரும் தூய தமிழ்ப் பெயராக இருப்பது; அறிவியல் சொற்களுக்கு ஈடாக தமிழ் சொற்களையு...