Mahakavi bharathi

 


மகாகவி பாரதி என் வீட்டுக்கு வந்தார்

இன்று மாலை சென்னை பிரிசிடென்சி ஹோட்டலில் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவினை நன்றி சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... அங்கு வாருங்கள்.

நண்பர் துரை ஆனந்த் குமார் அவர்களின் நூல்களை அளிக்கிறேன் என்று செல்பேசி வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார் நண்பர் பரிதி பதிப்பகத்தின் உரிமையாளர் இளம்பரிதி. Ilamparithi Parithi

நானும் சென்றிருந்தேன். தமிழக அரசு சார்பிலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பிலும் நிறைய நபர்கள் வந்திருந்தார்கள்.

அந்தக் கூட்டத்திலேயே தமிழ் இருக்கைக்கு அதிகம் பொருள் உதவி செய்வதாக பலர் உறுதி அளித்தனர் சிலர் தொகையை அங்கேயே அளித்தனர்.

சிறப்பு செய்யும் நேரத்தில் எதிர்பாராத விதமாக என்னையும் மேடைக்கு அழைத்து நான் அதிகம் விரும்பும் பாரதி சிலையை நினைவு பரிசாக அளித்ததை மிக மகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன்.

அடுத்த மாதம் பாரதியின் பிறந்தநாளில் கிடைக்க வேண்டிய பரிசாகவே இதை எண்ணுகிறேன் காரணம் பாரதி பிறந்த டிசம்பர் 11 இல் தான் நானும் பிறந்திருக்கிறேன்.

நினைவாக என்னையும் மேடையேற்றி அழகு பார்த்த அமெரிக்க நண்பர் சுவாமிநாதன் அவர்களையும்,, அழைப்பு விடுத்து என்னை உபசரித்து வழி அனுப்பிய நண்பர் இளம்பரிதி  ஆகியோரை மகிழ்வோடு நினைவு கூறுகிறேன்.

நானும் பாரதியும் ஒரே வண்டியில் இல்லத்திற்கு பயணமானோம்.

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை