Book review

 



#நூல்_அறிமுகம்

#பேரரசர்_இராசராச_சோழனின் #கொள்ளுப்பேரன்
#ஐசக்_நியூட்டன்

இப்படி ஒரு பெயரை தனது சிறார் அறிவியல் கதை நூலுக்கு சூட்டியிருப்பதன் மூலம் கவன ஈர்ப்பு கொள்ள செய்கிறார் புதுவையை சேர்ந்த எழுத்தாளர் கு.அ. #தமிழ்மொழி.

துளிப்பா, புதுப்பா, சிறார் பாடல், சிறார் சிறுகதைகள், மொழிபெயர்ப்பு பா எனப் பல்வேறு வகைகளில் நூல்களை வெளியிட்டு இருக்கும் இவர் தற்போது சிறார்களுக்காக அறிவியல் சிறுகதைகளும் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.

இந்த நூலில் மொத்தம் 18 கதைகள் இருக்கின்றன ஒவ்வொரு கதைக்குள்ளும் சிறு சிறு அறிவியல் ஒளிந்திருக்கிறது. அறிவியலோடு சுற்றுச்சூழல், ஒலி மாசு, நெகிழி சிக்கல் எனச் சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்தையும் கதைகளாக்கி சிறார்களுக்கு கொடுத்து இருக்கிறார்.

புவி ஈர்ப்பு விசையைக் குறித்து வினா எழுப்பினால் ஐசக் நியூட்டனை விடையாக தருவோம் ஆனால் ஐசக் நியூட்டனுக்கு முன்னாலேயே பேரரசர் ராஜ ராஜ சோழனின் புவியீர்ப்பு சான்றாக தஞ்சை பெரிய கோயிலை காட்டுகிறார்.. இந்தப் படைப்பாளி.

கதையின் கதா மாந்தர்கள் அனைவரின் பேரும் தூய தமிழ்ப் பெயராக இருப்பது; அறிவியல் சொற்களுக்கு ஈடாக தமிழ் சொற்களையும் அளித்திருப்பது; ஒவ்வொரு கதைக்கும் அதற்கேற்ற ஓவியங்களை இணைத்து இருப்பது என நூலை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார்.

உரையாடல் வழியே கதைகளை நகர்த்தி இடையிடையே சூழலியல் குறித்த அறிய செய்திகளையும் உலகம் மாசடைதல் பற்றிய எச்சரிக்கை உணர்வு வினையும் படிக்கிற மாணவர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார் கதைகளில் வரும் ஓவியங்கள் குழந்தைகளின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

ஓவியம் வரைந்த ஓவியர் இரா. அன்பழகன் அவர்களுக்கும் நூலை வெளியிட்டு இருக்கிற தமிழ் மொழி பதிப்பகத்திற்கும் எமது பாராட்டுகள்

📖பேரரசர் இராசராச சோழனின் கொள்ளுப்பேரன் ஐசக் நியூட்டன்
✍️நூலாசிரியர்: கு.அ.தமிழ்மொழி
பக்கங்கள்:108
விலை: ₹100
பதிப்பகம்: தமிழ்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி
📞9442188915

Comments

  1. நூலை வாசிக்கத் தூண்டும் அறிமுகம்.
    வாழ்த்துகள் ராஜா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01