குழந்தைக்கவிஞர் நூற்றாண்டில்




 நவம்பர் 7 2022 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை அவர்தம் குடும்பத்தினர் மிகச் சிறப்பாக நடத்தினர்.


அந்த விழாவில் பல பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவிகள் தங்களது தனித் திறமைகளை காட்டி வந்திருந்தோரை வியப்புக்கு உள்ளாக்கினர்.


கடந்த ஓராண்டில் குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டன


இந்நிகழ்வில் பல அரிய நூல்கள் வெளியிடப்பட்டாலும் வந்திருந்த பார்வையாளர்களுக்கு "குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய பணி வெள்ளி விழா மலர்" என்கிற மிக மிக முக்கியமான நூலை பழனியப்பா பிரதர்ஸ் (044-28132863 / 43408000) வெளியிட்டு இலவயமாக அளித்தனர்.


அந்த நூல் 1970 வெளியானது இரண்டாம் பதிப்பாக இந்த நூற்றாண்டில் வெளியாகி உள்ளது 


இதில் பல அரிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அழ.வள்ளியப்பா அவர்களுடன் பழகிய பலரின் அனுபவங்களின் கோர்வையாக இந்நூல் அமைந்திருக்கிறது 


இது வளரும் சிறார் எழுத்தாளர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.


மகிழ்ச்சி பரவட்டும்🍭

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01