Lollipop

லாலிபாப் சிறுவர் உலகத்தை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 450 குழந்தைகளை ஒருங்கிணைத்து தினமும் அவர்களுக்கான ஏதாவது ஒரு செயலாக்கத்தை/பயிற்சியைக் கொடுத்து வருகிறார் #சிறுவர்_இலக்கியச்_செம்மல் #கன்னிக்கோவில்_இராஜா அவர்கள்.




ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், எதாவது கைவினைப் பொருட்கள் செய்தல் இப்படித் தொடர்ந்து குழந்தைகளோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.




தான் மட்டும் உயராமல், தனக்கென மட்டும் என்று யோசிக்காமல் இளைய தலைமுறையினருக்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு,  அதையே தனது இலக்காக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களோடு லாலிபாப் சிறுவர் உலகத்தில் இணைந்து பயணிப்பது பெருமகிழ்ச்சி. 

இன்றைய லாலிபாப் சிறுவர் உலகத்தின் 
குழந்தைகளுக்கான ஒரு பயிற்சியாக கொடுக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சியை வரைக என்ற வகையில் #ஹரீஷ் என்ற குழந்தை கன்னிக்கோவில் இராஜா அவர்களையும், வண்ணத்துப்பூச்சியையும் இணைத்து அற்புதமாக ஓவியம் வரைந்து அனுப்பியிருந்தான். அந்த ஓவியத்தை வரைந்த ஹரீஷ் அவர்களுக்கு எனது அன்பும் வாழ்த்தும் பாராட்டும். 

#வி_ஹரீஷ்_ஆனந்த், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன். 

தனக்கு படம் மற்றும் கை வண்ணப் பொருட்கள் செய்ய மிகவும் பிடிக்கும் என்றும், ( haree crafts ) YouTube channel வைத்திருக்கிறேன் அத்தை. உங்கள் பாராட்டுக்கு மகிழ்ச்சி அத்தை நன்றி🙏🏼🙏🏼🙏🏼 என்று சொன்னான். பெருமிதமும் மகிழ்ச்சியும் எனக்கு. 

ஹரிஷுக்கு குழுவில் நாங்கள் வாழ்த்து சொல்வதைப் பார்த்து அண்ணனுக்கு மட்டும்தான் வாழ்த்தா? நானும் கூட நல்லா வரைவேன் என்று அடம் பிடித்து கன்னிக்கோவில் இராஜா சார் அவர்களின் படத்தை தானும் வரைந்து அனுப்பிய ஹரிஷின் தங்கைக்கும் சிறப்பு வாழ்த்தும் பாராட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கலைஞனுக்கு கிடைக்கக்கூடிய ஆகச் சிறந்த விருதுகளில் பெரும் விருது தெய்வத்திற்கு ஈடான மனம் கொண்ட குழந்தைகளால் போற்றப்படுவதும், அன்பு செலுத்தப்படுவதுமே ஆகும்.அந்த வகையில் இன்று ஹரிஷ் மற்றும் அவனது தங்கை வரைந்த ஓவியங்களை சிறுவர் இலக்கிய செம்மல் இராஜா அவர்களுக்கு கிடைத்த பெரிய விருதாக நான் நினைக்கிறேன்.





சிறுவர்களுக்காகவே தொடர்ந்து செயல்படும் இராஜா அவர்களுடைய முயற்சி மேலும் மேலும் தொடரட்டும்.. சிறுவர் உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்த இராஜா அவர்கள் மென்மேலும் உயரத்தைத் தொட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பதிவு செய்து கொள்கிறேன். 

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி 
வட அமெரிக்கா, மிச்சிகன்

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01