வெளிவந்து விட்டது - 'காணாமல் போன சிறகுகள்' – சிறார்க் கதைத் தொகுப்பு.. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07-11-2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி ஒன்றை அறிவித்தோம். அப்போட்டியில் பரிசு வென்றவர்களுக்குப் பரிசு அளித்து ஊக்கப்படுத்தினோம். மேலும் பரிசு வென்ற கதைகளைத் தொகுத்து ஆவணப்படுத்தும் எண்ணத்துடன், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு யர விரும்பினோம். அப்பணி இனிதே நிறைவடைந்து நூல் வெளிவந்து விட்டது என்பதை அறிவிப்பதில் மகிழ்கின்றோம். கதைகளை எழுதிய சிறார் படைப்பாளர்களுக்கு, ஒரு பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதில் 12 சிறுவர்கள் எழுதிய கதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. கதைகளை நன்றாக உள்வாங்கி, இவற்றுக்கு 13 மாணவர்கள் வரைந்த பொருத்தமான, அழகான கருப்பு வெள்ளை ஓனியங்களும் இடம் பெற்றுள்ளன. சிறார் ஓவியர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்! முதல் பரிசு பெற்ற 'அனுக்கிரஹா கார்த்திக்" எழுதிய கதையின் பெயரே, புத்தகத்தின் தலைப்பாகத் ...