சிறார் கதைகளை எழுதிய படைப்பாளர்கள்

 வெளிவந்து விட்டது - 'காணாமல் போன சிறகுகள்' – சிறார்க் கதைத் தொகுப்பு..

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07-11-2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி ஒன்றை அறிவித்தோம். அப்போட்டியில் பரிசு வென்றவர்களுக்குப் பரிசு அளித்து ஊக்கப்படுத்தினோம்.
மேலும் பரிசு வென்ற கதைகளைத் தொகுத்து ஆவணப்படுத்தும் எண்ணத்துடன், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு யர விரும்பினோம். அப்பணி இனிதே நிறைவடைந்து நூல் வெளிவந்து விட்டது என்பதை அறிவிப்பதில் மகிழ்கின்றோம். கதைகளை எழுதிய சிறார் படைப்பாளர்களுக்கு, ஒரு பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இதில் 12 சிறுவர்கள் எழுதிய கதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. கதைகளை நன்றாக உள்வாங்கி, இவற்றுக்கு 13 மாணவர்கள் வரைந்த பொருத்தமான, அழகான கருப்பு வெள்ளை ஓனியங்களும் இடம் பெற்றுள்ளன. சிறார் ஓவியர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்! முதல் பரிசு பெற்ற 'அனுக்கிரஹா கார்த்திக்" எழுதிய கதையின் பெயரே, புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நூலின் அழகான அட்டைப்படத்தை உருவாக்கியவர், சுட்டி உலகத்தின் ஆசிரியர் கீதா மதிவாணன். அருமையாகப் புத்தக வடிவமைப்பு செய்தவர் திரு கன்னிக்கோவில் இராஜா, இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!
இப்போட்டியில் கதை எழுதிய சிறுவர்கள் தொடர்ந்து எழுதி, எழுத்தை வசப்படுத்த இந்நூல் உந்துசக்தியாக விளங்கும். அவர்கள் தொடர்ந்து எழுதி, தங்கள் எழுத்துத் திறமையை வார்த்துக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ் வேண்டும் என்று வாழ்த்துகிறோம். இவர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
இப்போட்டி குறித்த தங்கள் எண்ணங்களை எங்களுக்கு எழுதினால் மகிழ்வோம். இப்போட்டியில் பங்குப் பெற்றுச் சிறப்பித்த அனைவருக்கும், எங்கள் நன்றியும், அன்பும்.
ஆசிரியர், சுட்டி உலகம்
May be a cartoon of 16 people and text that says "பரிசு பெற்ற சிறுவர்களின் விபரங்கள் காணாமல் போன சிறகுகள் சிறார் கதைகள் அனுக்ரஹா கார்த்திக் சிரியர் தொகுப்பையும் தொகுப்பாளர்கள் கன்னிக்கோவில் இராஜா ஞா. கலையரசி பபரிர்களில் பெற்றுள்ளார், சொல்லவும் எழுதவும் போட்டிகளில் பங்கேற்று ஒவிய பிரம்மாக்கள் உதகுப வயது) பிரியதர்ஷினி, முக்கிய சொல்வதிலும். 8-ஆ ஈரோடு ஊஞ்சலூர் ஈரோடு ரேோடு. சத்தியன்"
அன்புடன் ஆனந்தி, Manivasaga Priya Krishnamoorthy and 40 others
16 comments
8 shares
Like
Comment
Share

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01