Posts

Showing posts from January, 2022

மதிமுகம் தொலைக்காட்சியில் ஒரு படைப்பாளரின் கதை

Image
 மதிமுகம் தொலைக்காட்சியில் ஒரு படைப்பாளரின் கதை  எழுத்தாளர் அபிநயா ஸ்ரீகாந்த் மதிமுகம் தொலைக்காட்சியின் புசுசு வது ‘ஒரு படைப்பாளரின் கதை' நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், புத்தக வடிவமைப்பாளர், கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களை நேர்காணல் செய்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.️ http://kannikoilraja.blogspot.com/?m=1 சிறுவர்களுக்கான பல கதைகள் மற்றும் சிறுவர்களுக்கான செயல்பாடுகள் குறித்து பகிர்ந்து வருகின்றார். https://youtube.com/channel/UCP0eEpohVkH7bd3clWYXF4g இவரது பல கதைகள் தொலைக்காட்சியிலும், சிறுவர்கள் வாயிலாகவும் பகிரப்பட்டுள்ளது. விகடனிலும் இவரது கதையை ஒலிவடிவில் சொல்லி இருக்கின்றேன். அகில இந்திய வானொலியிலும் இவரது கதைகள் ஒளிபரப்பாகி இருக்கின்றது. சிறுவர் கதைகள்: ஒரு ஊர்ல.. ஒரு ராஜா ராணி | அணில் கடித்த கொய்யா | பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம் |  அப்துல்கலாம் பொன்மொழிக்கதைகள்  | கொம்பு முளைத்த குதிரை | தங்கமீன்கள் சொன்ன கதைகள்  ஒற்றுமையே வலிமையாம்  |  நிலவை எச்சரித்த கரடிக்குட்டி (அ...

கடல் கடந்த இளம் கதைசொல்லிகள் (lollipop Childrens world)

Image
கடல் கடந்த இளம் கதைசொல்லிகள் கடந்த 2020ஆம் ஆண்டு லாலிபாப் சிறுவர் உலகத்திற்கு அமெரிக்காவில் இருக்கும் கலாட்டா நெட்டிசன் யூ-ட்யூப் சேனலின் நிறுவுனர் கவிஞர் எழுத்தாளர் வியன் பிரதீப் அவர்கள், கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் மூலம் அறிமுகமானார். லாலிபாப் சிறுவர் உலகக் குழந்தைகளின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது இந்த கலாட்டா நெட்டிசன் என்னும் மேடை. மாதம் தோறும் ஆறு குழந்தைகளோடு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி, இந்த ஜனவரி 2021ல் ஓராண்டை வெற்றிகரமாக கடந்து இருக்கிறது என்பதே பெருமிதம் அளிக்கிறது. சுமார் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி இருப்பது லாலிபாப் சிறுவர் உலகத்திற்கும், பெற்றோருக்கும் மகிழ்ச்சியான.. பெருமையான விடயம். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் குழந்தைகளிடம் இதன் நிறுவனர் எழுத்தாளர் வியன் கேட்கும், “உங்களுக்கு கன்னிக்கோவில் ராஜா மாமாவையும், ஆனந்தி அத்தையையும் ஏன் பிடிக்கிறது?” என்கிற கேள்விக்கு குழந்தைகள் கூறும் பதில்கள் பலரையும் நெகிழச் செய்து இருக்கின்றன. 30.01.2022 தியாகிகள் தினமான (மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 75ஆவது நினைவுந...

தமிழ் இலக்கியப் பெருவிழா

Image
 தமிழ் இலக்கியப் பெருவிழா பேக்கிடெர்ம்டேல்ஸும் (ஆம்பல் கதைகள்), மாய கதாவும் இணைந்து நடத்திய குழந்தை இலக்கியத்தை மையக் கருவாக கொண்ட தமிழ் இலக்கியப் பெருவிழா நிகழ்ச்சி ஜனவரி சு8, சு9, 30 ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் புசு மணிவரையும், மாலை 5 மணி முதல் 7 மணிவரையும் நடத்துகிறது. இந்நிகழ்வில் ஜனவரி சு8, சு0சுசு வெள்ளிக்கிழமை மாலை நிகழ்வாக ‘குழந்தைப் பாடல்கள்’ தலைப்பில் சிறுவர் இலக்கியச் செம்மல் கன்னிக்கோவில் இராஜா மற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி இணைந்து லாலிபாப் சிறுவர் உலகத்தின் குழந்தைகள் சிறுவர் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி அரங்கேறியது. மாலை நிகழ்சியை கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் ஒருங்கிணைக்க, சிறுவர் இலக்கியச் செம்மல் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஆம்பூரில் 3ஆம் வகுப்பு படிக்கும் சு. அமிழ்தினி, ‘பூனை சவாரி’ பாடலையும், திருச்சியில் 5ஆம் வகுப்பு படிக்கும் செ. ஸ்ரீலேகா, ‘மழையக்கா’ பாடலையும், வந்தவாசியில் 8ஆம் வகுப்பு படிக்கும் செ. அனந்தரா ஸ்ரீ ‘வேட்டையாடும் கொசுக்கூட்டம்’ பாடலையும், சேலத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும். ர.அ. நேத்ர ஸ்ரீ ‘அசட்டுக்குரங்கு’ பா...

நானும் இயக்குனர்தான்

Image
  #நானும்_இயக்குனர்தான் கதையை நாடகமாக்கிய மாணவர்கள் தெய்வீகத் தமிழ் அறக்கட்டளை மற்றும் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் நடத்திய நானும் இயக்குனர்தான் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில்... நான் (கன்னிக்கோவில் இராஜா) எழுதிய "ஐஸ்பாய் விளையாடிய அணில்" என்கிற மரம் பாதுகாப்பு குறித்த கதையை மாணவர்கள் நாடகமாக நடித்தனர் அணில், முயல், நரி, குரங்கு என்கின்ற விலங்குகளின் வேடம் தரித்து நாடகமாக நடித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினர். நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவி சங்கமித்ரா "குட்டிக் குரங்கின் சிரிப்பு" கதைப் பாடலை சிறப்பாக பாடி நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார் இதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் தனித் திறமையாக அவர்களுக்கு தெரிந்த செய்திகளை உரையாடலாக, பேச்சாக பேசி நடித்துக் காட்டினர்‌. அது சிறப்பாக இருந்தது இவர்களை சிறப்பாக தயார் படுத்திய பெற்றோருக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியர் தேவிப்பிரியா அவர்களுக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நித்யஸ்ரீ மாணவிக்கும், சிறப்பு விருந்தினருக்கும் லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக வாழ்த்துக்கள்