நானும் இயக்குனர்தான்

 



#நானும்_இயக்குனர்தான்

கதையை நாடகமாக்கிய மாணவர்கள்

தெய்வீகத் தமிழ் அறக்கட்டளை மற்றும் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் நடத்திய நானும் இயக்குனர்தான் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில்...

நான் (கன்னிக்கோவில் இராஜா) எழுதிய "ஐஸ்பாய் விளையாடிய அணில்" என்கிற மரம் பாதுகாப்பு குறித்த கதையை மாணவர்கள் நாடகமாக நடித்தனர்

அணில், முயல், நரி, குரங்கு என்கின்ற விலங்குகளின் வேடம் தரித்து நாடகமாக நடித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவி சங்கமித்ரா "குட்டிக் குரங்கின் சிரிப்பு" கதைப் பாடலை சிறப்பாக பாடி நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார்

இதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் தனித் திறமையாக அவர்களுக்கு தெரிந்த செய்திகளை உரையாடலாக, பேச்சாக பேசி நடித்துக் காட்டினர்‌. அது சிறப்பாக இருந்தது

இவர்களை சிறப்பாக தயார் படுத்திய பெற்றோருக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியர் தேவிப்பிரியா அவர்களுக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நித்யஸ்ரீ மாணவிக்கும், சிறப்பு விருந்தினருக்கும் லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக வாழ்த்துக்கள்


Comments

  1. மிக்க மகிழ்ச்சி ஐயா. நமது படைப்பு இவ்விதம் உருப்பெறுவது மிகவும் பெருைமை அடையத்தக்க ஒன்றாகும். தொடரட்டும் தங்கள் பணிகள். வாழ்க பல்லாண்டு!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. வாழ்க வளர்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01