தமிழ் இலக்கியப் பெருவிழா

 தமிழ் இலக்கியப் பெருவிழா

பேக்கிடெர்ம்டேல்ஸும் (ஆம்பல் கதைகள்), மாய கதாவும் இணைந்து நடத்திய குழந்தை இலக்கியத்தை மையக் கருவாக கொண்ட தமிழ் இலக்கியப் பெருவிழா நிகழ்ச்சி ஜனவரி சு8, சு9, 30 ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் புசு மணிவரையும், மாலை 5 மணி முதல் 7 மணிவரையும் நடத்துகிறது.




இந்நிகழ்வில் ஜனவரி சு8, சு0சுசு வெள்ளிக்கிழமை மாலை நிகழ்வாக ‘குழந்தைப் பாடல்கள்’ தலைப்பில் சிறுவர் இலக்கியச் செம்மல் கன்னிக்கோவில் இராஜா மற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி இணைந்து லாலிபாப் சிறுவர் உலகத்தின் குழந்தைகள் சிறுவர் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி அரங்கேறியது.

மாலை நிகழ்சியை கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் ஒருங்கிணைக்க, சிறுவர் இலக்கியச் செம்மல் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

ஆம்பூரில் 3ஆம் வகுப்பு படிக்கும் சு. அமிழ்தினி, ‘பூனை சவாரி’ பாடலையும், திருச்சியில் 5ஆம் வகுப்பு படிக்கும் செ. ஸ்ரீலேகா, ‘மழையக்கா’ பாடலையும், வந்தவாசியில் 8ஆம் வகுப்பு படிக்கும் செ. அனந்தரா ஸ்ரீ ‘வேட்டையாடும் கொசுக்கூட்டம்’ பாடலையும், சேலத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும். ர.அ. நேத்ர ஸ்ரீ ‘அசட்டுக்குரங்கு’ பாடலையும் இ திருச்சியில் 3ஆம் வகுப்பு படிக்கும் க.ம. அல்வாஃபிகா ‘வெட்கம் கொண்ட கொக்கு’ பாடலையும் மலேசியாவில் 5ஆம் வகுப்பு படிக்கும் நிமலரூபன் இராஜமாணிக்கம் ‘வேலைக் கேட்டுவந்த வாத்து’ பாடலையும் பாடி, பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுப் பெற்றனர். இந்தப் பாடல்கள் அனைத்தும் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா எழுதிய கீக்கீ கிளியக்கா நூலில் உள்ளவை. 



எழுத்தாளர் சுதா திலக் மற்றும் செயல்பாட்டாளர் திருமதி. உமா அபர்ணா ஆகியேரரின் பின்னூட்டம் குழந்தைகளைப் போலவே பெற்றோரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சார்பில் பேக்கிடெர்ம்டேல்சின் இளம் சாதனையாளர் லஷ்மிபிரியா அவர்களின் உரை சிறப்புச் சேர்த்தது. 

பேக்கிடெர்ம்டேல்ஸும் (ஆம்பல் கதைகள்), மாய கதா ஆகியோருக்கு லாலிபாப் சிறுவர் உலகத்தின் மனமார்ந்த நன்றியோடு இன்றைய விழா நிறைவுற்றது.

Comments

Post a Comment

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01