கடல் கடந்த இளம் கதைசொல்லிகள் (lollipop Childrens world)


கடல் கடந்த இளம் கதைசொல்லிகள்

கடந்த 2020ஆம் ஆண்டு லாலிபாப் சிறுவர் உலகத்திற்கு அமெரிக்காவில் இருக்கும் கலாட்டா நெட்டிசன் யூ-ட்யூப் சேனலின் நிறுவுனர் கவிஞர் எழுத்தாளர் வியன் பிரதீப் அவர்கள், கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் மூலம் அறிமுகமானார்.


லாலிபாப் சிறுவர் உலகக் குழந்தைகளின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது இந்த கலாட்டா நெட்டிசன் என்னும் மேடை. மாதம் தோறும் ஆறு குழந்தைகளோடு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி, இந்த ஜனவரி 2021ல் ஓராண்டை வெற்றிகரமாக கடந்து இருக்கிறது என்பதே பெருமிதம் அளிக்கிறது.

சுமார் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி இருப்பது லாலிபாப் சிறுவர் உலகத்திற்கும், பெற்றோருக்கும் மகிழ்ச்சியான.. பெருமையான விடயம்.

ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் குழந்தைகளிடம் இதன் நிறுவனர் எழுத்தாளர் வியன் கேட்கும், “உங்களுக்கு கன்னிக்கோவில் ராஜா மாமாவையும், ஆனந்தி அத்தையையும் ஏன் பிடிக்கிறது?” என்கிற கேள்விக்கு குழந்தைகள் கூறும் பதில்கள் பலரையும் நெகிழச் செய்து இருக்கின்றன.

30.01.2022 தியாகிகள் தினமான (மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 75ஆவது நினைவுநாள்) இன்று பன்னிரண்டாவது லாலிபாப் சிறுவர் உலகம் மற்றும் கலாட்டா நெட்டிசன் இணைந்து நடத்திய புசுவது நிகழ்ச்சி நடந்தேறியது.


இந்த நிகழ்ச்சியில் 6 குழந்தைகள் கலந்துகொண்டு கதைகளைச் சொல்லி மகிழ்ச்சி படுத்தினர்.

ஈரோட்டில் இருந்து ‘பட்டுவைக் காப்பாற்றிய சிட்டு’ நட்புக்கு உதாரணமாக இருப்பதைப் பற்றிய கதையை சொல்லி முடித்தார் ச.ச. சுபவர்ஷினி. அவரைத் தொடர்ந்து கோவையிலிருந்து அர்ஜூன் ஸ்ரீவத்ஸன், ‘கூடைப்பந்து விளையாடிய எலிகள்’ கதையைக் கூறி தன்னம்பிக்கையோடு இருப்பது எப்படி என்பதை அறிவுறுத்தினார்.

திருவள்ளூரில் இருந்து ‘துணிச்சல் மிக்க சிறுபறவை’ எனும் இயற்கை சார்ந்த கதையை மு. சானியா அவர்கள் கூறியது சிறப்பாக இருந்தது. ‘எறும்புக்கு லட்டு தந்த நிலா’ கதை மூலம் பிறருக்கு பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற கருத்தை கதையாக சொல்லிய திருச்சி அ.ம. அல்வாஃபிகாவும் ‘புல் அரசன் யாரு?’ நட்புக்கு உதாரணமாக கதையை திருப்பூர் பிரணவ்வும், ‘குட்டிக்குரங்கு புஜ்ஜி’ என்ற கதை மூலம் தண்ணீரை சேமிப்போம் என்ற கருத்தை உள்ளடக்கிய கதையை திருப்பூர் பிரணவியும் ஏற்ற இறக்கத்தோடு கூறியதோடு மனதில் பதியும்படியும் கூறினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் சானியா, பி.கீ. பிரணவ், பி.கீ. பிரணவி ஆகியோர் முதல் முறையாக கதைகளைக் கூறினார்கள் என்பதைவிட, அனுபவமிக்க கதைசொல்லிகள் போலக் கூறியிருந்தது பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்ச்சியை 

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட 
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை 
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ 
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் 
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி 
வேளைதோறும் கற்று வருவதால் படியும்! 
மலைவாழை அல்லவோ கல்வி? - நீ 
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடலோடு ஆரம்பித்து, சிறப்பாக நிறைவு செய்தார் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள்.

இடையிடையே குழந்தைகள் கூறிய கதைகளுக்கு அவர்களின் உடல் மொழி, குரலுக்கேற்றப் பின்னூட்டத்தை அளித்தார் லாலிபாப் சிறுவர் உலகத்தில் நிறுவனர், சிறுவர் இலக்கிய செம்மல் கன்னிக்கோவில் இராஜா அவர்கள்.

குழந்தைகள் கூறியக் கதைகளைப் பாராட்டி, அவர்களிடம் கேள்விகள் கேட்டு, நன்றி உரையாக நிறைவுரை செய்தார் கலாட்டா நெட்டிசன் நிறுவனர் எழுத்தாளர் வியன் பிரதீப் அவர்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியை முகநூலில் காண இதைச் சொடுக்குங்கள்: 

https://fb.watch/aSi8gYiA4a/

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01