Nooleni Noolkodai

நூலேணி நூல்கொடை திட்டத்தின் வாயிலாக மலேசியாவில் வசிக்கும் நல்லாசிரியர் புனிதா சுப்ரமணியன் அவர்கள், வாழப்பாடி, ஜம்பூத்துமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நூல் கொடை அளித்தார். தலைமை ஆசிரியர் திரு. கலைச்செல்வன் அவர்களின் மூலம் மாணவர்களுக்கு புத்தகங்கள்அளிக்கப்பட்டன. அவர்கள் வாசிக்க ஆரம்பித்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. நூல்களை கொடை அளித்த மலேசியா ஆசிரியர் புனிதா அவர்களுக்கும், நூல்களை எழுதி லாலிபாப் சிறுவர் உலகத்தில் வெளியிட்ட எழுத்தாளர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும், படித்துப் பயன்பெற உள்ள மாணவச் செல்வங்களுக்கும் நூலேணி நூல்கொடைத் திட்டம் மற்றும் லாலிபாப் சிறுவர் உலகம் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மகிழ்ச்சி பரவட்டும். கன்னிக்கோவில் இராஜா - நெல்லை அன்புடன் ஆனந்தி