புதிய புத்தகம் பேசுது, ஏப்ரல் 2022

 நான் வாசித்தேன் நீங்கள்?

- ஆயிஷா இரா. நடராசன்

நெல்மரப் பறவை - கன்னிக்கோவில் இராஜா


நிவேதிதா பதிப்பகம் ரூ.100/

கன்னிக்கோவில் இராஜா சிறார் கதையாளர்களில் இன்று குறிப்பிடத்தக்கவர். சென்னைவாசி. தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்பு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நான் அறிந்த வரையில் சிறந்த கதைசொல்லி. இந்தத் தொகுப்பு குழந்தைகளுக்காக அவர் எழுதிய ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு. 

தங்கள் குஞ்சுகளின் உணவருந்தும் இடத்தில் புறாக்களும் சாப்பிட வருகின்றன இதுகுறித்து குஞ்சுகள் விவாதிக்கின்றன. உணவு அனைவருக்கும் பொது. நம்மை விரட்டிவிட்டு அவர்கள் சாப்பிட்டால் தவறு, சேர்ந்து சாப்பிடுவதில் தவறில்லை என்று அம்மா கோழி சொல்வது அருமை.

எறும்புகள் குடியிருப்பு, கட்டுப்போட்ட முயல், அம்மாவைக் காணோம் போன்றவை குழந்தைகள் விரும்பி வாசிக்கத்தக்க எளிய நடை கதைகள். நெல்மரப்பறவை கதை நம் கல்வியில் பலவீனத்தை சுட்டும் அழகான கதை. பாடத்தில் வருவது, காதால் கேட்பது இவற்றை எல்லாம் விட நேரில் அனுபவிப்பதே மெய் என்பதை சொல்கிறது. ஓவியர் ஜமால் இந்த நூலுக்கு அற்புத தத்ரூப படங்களால் உயிர்ப்பு ஊட்டி இருக்கிறார்.

- புதிய புத்தகம் பேசுது, ஏப்ரல் 2022

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை