Dinamani Siruvarmani Children's Book Review

 பட்டாம்பூச்சி தேவதை - சிறுவர் கதைகள் | கன்னிக்கோவில் இராஜா | பக்.: 112 | 

விலை: ரூ.120 வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம், 

அபிராமபுரம் முதல் தெரு, சென்னை 600 018. பேச: 98412 36965



இருவர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் அவர்களைப் பார்த்து ‘பூனையும் எலியும் போல இருக்கிறார்கள்’ என்பது வழக்கம். ஆனால் இந்த எலிகள் எப்படி பூனையிடம் பயமில்லாமல் கதைகள் கேட்டன... வியப்பாக இருக்கிறதல்லாவா? தன் பாட்டி மியாவ் சொன்ன ஐடியாவைக் கேட்டு எலிகளுக்குக் கதை சொல்லத் தொடங்கி இறுதியில் பூனை எப்படி மனம் மாறுகிறது என்பதுதான் ‘பூனையிடம் கேட்ட எலிகள்’ கதை.

‘எத்தனை முறை அழித்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் உருவாக்குவோம்’ என்பதை வண்டுக்கு உணர்த்தி, வண்டை மனமாற்றம் செய்ய வைக்கிறது. ‘பட்டாம்பூச்சி தேவதை’ கதை. உண்மையிலேயே நம் மனத் தோட்டத்திலும் தேவதையாகவே வலம் வருகிறது இந்தப் பட்டாம்பூச்சி.

நமது இயல்பான உணவு முறையை மாற்றும்போது நம் உடல் அதை ஏற்க மறுத்து, தேவையில்லாத சிக்கல் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெடும் என்பதைப் புரிய வைக்கும் ‘அம்மாவிடம் சொல்லிவிட்டு போ’ கதை அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. பாராசூட்டில் பறக்க ஆசைப்பட்ட யானையின் கதை ‘முயற்சி செய்தால் முடியாத காரியம் எதுவும் இல்லை’ என்பதை உணர்த்துகிறது. இதுபோல புரியாத கிளியக்கா, புலி வருது புலி வருது இசை மீட்டிய குரங்கு, பானைகளின் நீர்ப் பந்தல், வீடு திரும்பிய அணில், விதை பறப்பிய பறவைகள் முதலிய 12 விதவிதமான, சுவாரசியமான கதைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலாசிரியர் கன்னிக்கோவில் இராஜா.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01