வட அமெரிக்கா பொது நூலகத்தில் கன்னிக் கோவில் இராஜாவின் புத்தகங்கள்*


 *வட அமெரிக்கா பொது நூலகத்தில் கன்னிக் கோவில் இராஜாவின் புத்தகங்கள்*


சிறுவர் இலக்கிய உலகில் 

எனக்கு அறிமுகமான நல்ல நட்பு  சிறுவர் இலக்கியச் செம்மல் திரு. *கன்னிக்கோவில் இராஜா* அவர்கள் எழதிய 16 புத்தகங்கள்  இன்று வட அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் *ராச்செஸ்டர் ஹில்ஸ் பொது நூலகத்தில் Rochester Hills Public Library*  வைக்கப்பட்டு உள்ளது என்பதை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


அருமையான அறக் கருத்துகளையும், 

அறிவியல், சுற்றுச்சூழல் கருத்துகளையும் இளைய தலைமுறையினர் எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து தனது சிறந்த படைப்புகளை வழங்கி வரும் சிறந்த எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.


தங்கள் இலக்கியப் பணி மென்மேலும் சிறக்க இறை அருளட்டும்.


*நெல்லை அன்புடன் ஆனந்தி*

மிச்சிகன், வட அமெரிக்கா

2022.06.15

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01